மலேசியாவில் உள்ள வெளிநாட்டினரை ஒழுங்கப்படுத்தும் விதமாக, கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மன்னிப்பு திட்டத்தின் கீழ் 840,000 த்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சரணடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு அவரவரின் சொந்த நாட்டிற்கே நாடுகடத்தப்படுவார்கள்.
இந்த எண்ணிக்கையினை உறுதி செய்துள்ள மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி, இதே காலக்கட்டத்தில் இத்திட்டத்தின் வாயிலாக 400 மில்லியன் மலேசிய ரிங்கட் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். நாடு திரும்பும் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியும் 300 மலேசிய ரிங்கட்(இந்திய மதிப்பில் சுமார் 5000 ரூபாய்) அபராதமும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான சிறப்பு அனுமதியினை பெற 100 மலேசிய ரிங்கட்டும் (சுமார் 1600 ரூபாய்)செலுத்துவது அவசியமாகும்.
“அப்படி அவர்களால் அத்தொகையை செலுத்த முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்டவரின் நாட்டு தூதரகமோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ அதை செலுத்த வேண்டும்” என அறிவுறுத்திருக்கிறார் முஸ்தபர் அலி.
அதே சமயம், நடப்பாண்டில் மட்டும் 148,774 குடியேறிகள் மன்னிப்பு திட்டத்தின் வாயிலாக சொந்த நாட்டிற்கே திரும்ப முன்வந்துள்ளனர். மன்னிப்பு திட்டத்தின் கீழ் நாடு திரும்ப் விரும்புகிறவர்கள் வரும் ஆகஸ்ட் 30 க்குள் சரணடைய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்தோ அனுமதி காலத்தை கடந்தோ வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையே சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்துகின்றது மலேசிய அரசு.
ஆகஸ்ட் 30 வரை சரணடைவதற்கான காலக்கெடு உள்ள போதிலும், இவ்வாறான தொழிலாளர்கள் மீண்டும் மலேசியாவில் வேலை விரும்பிய பட்சத்தில் ஜூன் 30 க்குள் முறையான அனுமதி பெற விண்ணப்பித்திருக்க வேண்டும். ஜூன் 30 காலக்கெடு முடிந்ததை அடுத்து, ஆப்ரேஷன் மெகா 3.0 பெயரில் தேடுதல் வேட்டை நடத்திய குடிவரவுத்துறை 5,444 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்திருந்தது.
முன்னதாக, “மலேசிய விடுதலை அடைந்த நாளான ஆகஸ்ட 31 அன்று தேடுதல் வேட்டை நடத்தப்பட இருப்பது தற்செயலாக அமைந்துள்ளது. ஆகவே, அந்நாளை பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களிடமிருந்து இந்நாட்டை விடுதலை அடையச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என குடிவரவத்துறையின் இயக்குனர் ஜெனரல் முஸ்தபர் அலி சபதமேற்றிருந்தார்.
பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்