வெனிசுவேலா அதிபரை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில், தேசிய பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
முன்னதாக வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் இந்த தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சியையும், கொலம்பியா தேசத்தையும் குற்றஞ்சாட்டி இருந்தார்.