கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறினார்.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.15 அளவில் அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கடந்த நூறு ஆண்டுகளில் மோசமான வெள்ளத்தை தற்போது கேரளம் சந்தித்து வருவதாகவும், 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 324 பேர் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.