ஆஸ்திரேலியாவின் இடைக்கால பிரதமராக பொருளாளர் ஸ்காட் மாரிசன் பதவியேற்க உள்ளார்.ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது மால்கம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். லிபரல் கட்சியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.
அதில் தான் மீண்டும் போட்டியிடபோவதில்லை என மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி அவர் போட்டியிடவில்லை. வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.
அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் ஆகிறார். ஆஸ்திரேலியாவில் வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை இவர் பிரதமராக பதவி வகிப்பார்.