வணக்கம் திருமதி கந்தையா கலைவாணி நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பெண்கள் அமைப்பினரோடு சேர்ந்து பணியாற்றுவதோடு, “எழுகதிர் ஏழையின் வாழ்வில் உதயம்” என்னும் அமைப்பின் செயல்ப்பாட்டுக்குழுத் தலைவியாகவும் உள்ளீர்கள், உங்களிடம் சில கேள்விகள்,
கடலூரான் சுமன் :- முதலில் உங்களைப் பற்றி அறிமுகம் ஒன்றைத் தாருங்கள்?
கலைவாணி :- அறிமுகம்; நான் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் ஒரு குடும்பத் தலைவியா இருந்து கொண்டு பெண்கள் சார்த பல அமைப்புகளுடன் சேர்ந்து எமது சமூகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
கடலூரான் சுமன் :-, எழுகதிர் அமைப்பின் தோற்றம், அதன் செயல்ப்பாடுகள் பற்றிக்கூறுங்கள்?
கலைவாணி :- எழுகதிர் ஏழையின் வாழ்வில் உதயம்…இவ்வமைப்பானது தோற்றம் பெறுவதற்கு முதல்.. அதன் ஸ்தாபகரும் தலைவருமாகிய எங்கள் சகோதரர் (சதா தம்பிராசா ) அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நல்லதொரு சமூக சிந்தனையாளரும். ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர்.
இதனால் இவருடைய செயற்பாடுகள் நிறையவே தமிழ் மக்களுக்காகவும், பாடசாலை மாணவர்களுக்காகவும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொண்டு இருந்தார். இவருடன் சேர்ந்து நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். சுமார் (6 மாத )காலமாக நாங்கள் 6 பேர் கொண்ட சிறிய குழுவாக 2 பெண்களும் 4 ஆண்களுமாக சேர்ந்து. பல உதவிகளை யுத்தம்.சுனாமி போன்ற அனரத்தம் நடைபெற்ற மக்களின் கஷ்டம், துன்பம், வேதனை, குடும்பம் பிரிந்து வாழ்வது. என்பதெல்லாம் என்னவென்று அறிந்து கொண்டு மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு எங்களால் இயன்றவரை உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் நோக்கமாகும்
கடலூரான் சுமன் :- எழுகதிர் அமைப்பால் நீங்கள் இதுவரை செய்துள்ள சேவைகள் என்ன,
வாழ்வாதார உதவியாக நீங்கள் வளங்கும் உதவித்திட்டங்களில் உற்பத்திப் பொருளாதாரத்துக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?
கலைவாணி :- எழுகதிர் அமைப்பால் இதுவரை நீங்கள் செய்துள்ள சேவைகள் என்ன, வாழ்வாதரமாக நீங்கள் செய்யும் உதவிகளில் உற்பத்திப் பொருளாதாரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?
உண்மையில் இன்று மக்களின் வறிய நிலைக்கு காரணம் உற்பத்தி பொருளாதாரத்தைக் கைவிட்டு இறக்குமதி பொருளாதாரத்தில் வாழ முற்படுவதே ! வாழ்வாதார உதவிகளைச் செய்ய முட்படும் அமைப்புகளும் சரி நிறுவனங்களும் சரி.இறக்குமதி செய்யப்பட்ட ஆடு மாடு கோழி போன்றவற்றை வழங்காது எமது உள்ளூர் ஆடு மாடு கோழிகளை வழங்க முன் வரவேண்டும்.
அத்தோடு வீட்டில் இருந்து செய்யக்கூடிய கைத்தொழில் முறைமைகளையும் வீட்டுத் தோட்டங்களையும் .உற்பத்தி செய்யுமாறு மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதோடு அதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்ய இந்த சமூக அமைப்பைக்கள். முன் வரவேண்டும்.
அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்ற போது ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைய செய்ய முடியும்.
கடலூரான் சுமன் :- இன்று நடக்கும் பல தற்கொலை மரணங்களுக்கு காரணம் நுண்கடன் எனக்கூறப்படுகின்றது, வங்கிகளிலில் பல லட்சங்களை கடணாகப் பெற்று அந்த கடனை பலமாதங்களாக கட்டாது விட்டும் தற்கொலை செய்துகொண்டாத இன்றளவில் செய்திகள் இல்லை, ஆனால் இந்த நுண்கடனாக இருபாயிரம், முப்பதாயிரம் பெற்றவர்கள் மரணம்வரை செல்ல காரணம் என்ன?
கலைவாணி :- இப்போது வடகிழக்கில் பாரிய சமுக பிரச்சினையாக காணப்படுவது நுண்கடன்.. யுத்ததினாலும்,சுனாமியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட சமூகம்களில் ஒன்றாக காணப்படுகிறது. சமுதாயத்தில் இது பாரி பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தியது. சுனாமிக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் தலைதூக்கின.
அதன் பிற்பாடு ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் கிராமங்களில் உள்ள பெண்களை குறிவைத்து நாள் வட்டி கிழமை வட்டி, மாத வட்டி, என்று பலதரப்பட்ட கோணங்களில் நுண்கடனை வழங்கிவிட்டு .வீடு வீடாக சென்று கடனை அறவிடுவது அப்படி கடனை தவனை முறையில் செலுத்த தவறும் பட்சத்தில் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசுவது தவறான நடத்தையில் ஈடுபடுத்த முற்படுவது.பாலியல் லஞ்சம் கேட்பது,குழுவில் ஒருத்தர் தவனை கட்டனம் செலுத்த தவறினால் அக்குழுவில் உள்ள அனைவரையும் கடனை கட்டி விட்டு செல்லும் படி வற்புறுத்துவது. இதற்கு காரணம் நுண்கடன் நிதிநிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் சரியாக தெரிவு செய்ய படாமையே காரணம்
அதிகூடிய அதாவது வங்கிகளில் 400000/= 500000/= கடனைப் பெற்றவர்கள் தற்கொலை முயற்சி செய்யாதமைக்குக் காரணம் வங்கிகள் பல சலுகைகளை மக்களுக்கு வழங்குகின்றது. அதாவது கடன் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு அக்கடனைத் திருப்பி செலுத்தும் வரை அலுத்தங்களை கொடுப்பதில்லை.வங்கிகளில் கடமை புரிபவர்கள் வாடிக்கையாளர்களுடன் மரியாதையாகவும், நல்ல பண்பாகவும், மனிதநேயத்துடனும் உரையாடுதல் வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து கடனை மீளப்பெற்றுக் கொள்ளுதல்
கடலூரான் சுமன் :- இன்று நடக்கும் சமூகச்சீர்கேடுகளுக்கு காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
கலைவாணி :- சமுகசீர்கேடுகளுக்குள் பாலியல் துஷ்பிரயோகம்,போதைவஸ்த்து,கலாச்சாரசீர்கேடு போன்றவற்றை உள்ளடக்கலாம். இவைகளை தடுப்பதற்கு .போதிய விழிப்புணர்வு இன்மை சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகிற சீர்கேடுகளை கட்டுப்படுத்தலாம்
கடலூரான் சுமன் :- கிழக்குமாகாணத்தில் இன்றைய அரசியல் அபிவிருத்திகள் எவ்வாறு உள்ளன?
கலைவாணி :- தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் அபிவிருத்தி பூச்சியமாகவே காணப்படுகிறது. காரணம்;அரசாங்கத்தை சார்ந்து இருக்காத எந்த கட்சியோ!!சமூகமோ!! அபிவிருத்தி என்பதை எட்டுவது கடினம்.கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் சகோதர இனத்தை எடுத்து கொள்வோமானால். அவர்களுடைய அபிவிருத்திக்கு அவர்களுக்கு வெறுமனே இலங்கை அரசாங்கம் மட்டும் கைகொடுப்பதில்லை.மத்திய கிழக்கு நாடுகள்..சகோதர இன மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறார்கள். அத்தோடு அந்த சமூகம் அவர்களுடைய பொருளாதாரம் வியாபாரத்தில் தங்கி நிற்கிறார்கள். தமிழ் சமூகம் ஒட்டுமொத்தமாக அரசாங்கதினையே நம்பி மட்டுமே வாழ வேண்டிய நிலை. நமது சமுதாயம் நல்ல நிலையில் இருக்கவேண்டுமானால் ஏன் நாடுகடந்து வாழும் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார். அவர்களால் ஏன் எங்கள் சமுகத்திற்கு உதவிகளை செய்து கொடுக்க முடியாது.வெறுமனே வாய் பேச்சளவில் மட்டுமே உள்ளார்கள்
.எங்கள் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் எந்த வித அமைச்சுப் பதவிகளுமே எங்கள் தமிழ் பிரதிநிதிகளிடமும்.இல்லை. நமது அரசியல் தமிழ் கட்சிகள் இன்னும் அவர்களுடைய இருப்புக்காக ஒருத்தரை ஒருத்தர் சாடுவது..அவர் துரோகி,இவர் துரோகி, என்று மற்றவர்களை குறை கூறிக்கொண்டு சமுதாயத்தில் சேவையை செய்ய கூடியவர்களையும். தட்டிக் கழிப்பது காரணம்; தமிழ் மக்களின் வாக்குகளை தாங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் பெயராசையும் ஒரு காரணமாக நான் கருதுகிறேன். தமிழ் மக்களின் அபிவிருத்தி வேண்டும் என்றால். தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குடையின் கீழ் பயணிக்க வேண்டும் அப்படி வாக்குகளைப் பெற்று ஆதரவையும் பெற்று அபிவிருத்தியையும் சார்ந்து போகாவிட்டால் 10 வருடங்கள் தேவை இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் போதும் நமது இருப்பும் அழிந்து அபிவிருத்தி என்பதை நினைத்து பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்படும். என்பதே எனது கருத்து.
தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் உரிமையும் முக்கியம்.அதே நேரம் அபிவிருத்தியும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது
கடலூரான் சுமன் :- நீங்கள் ஒரு பிரதேசசபை உறுப்பினர் என்றவையில் நீங்கள் பிரநிதித்துவம் செய்யும் வட்டாரமும், அந்த வட்டாரத்தில் உங்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களும் என்ன?
கலைவாணி :- ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஆறுமுகத்தான் குடியிருப்பு-2வட்டாரத்தில் போட்டியிட வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. பெரும்பான்மை கட்சி ஒன்றில் போட்டியிட்டு விகிதாச்சார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.இரண்டு உறுப்பினர்களுக்கு நான்கு வருடங்களை பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்போதைக்கு ஒரு சகோதரி இருக்கிறார்கள்
அம்மணி அமுதினி .உறுப்பினராக சேவையை செய்து கொண்டு இருக்கிறார்கள். எது எவ்வாறாயினும் இன்னும் ஏறாவூர் பற்றில் ஒரு சில இடங்களில் சிறு சிறு வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனது வட்டாரத்தில் எனது கண்களுக்கு எட்டிய வகையில் எதுவும் நடைபெறவில்லை. என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே வீதி விளக்குகள் கூட இன்னும் போடப்படவில்லை.எனக்கு இனிமேல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.மக்களின் விருப்பமே எனது விருப்பம். மக்களுக்காக சமூகசேவை செய்வது அரசியலிலும் பார்க்க பிடித்து இருக்கிறது. மனநிம்மதியுடன் தொடருவேன் எனது மக்களுக்கான பயணத்தை…..
கடலூரான் சுமன் :- உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில்களைத் தந்தமைக்கு மிக மிக நன்றி