முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நினைவேந்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமான பொதுமக்கள் நாளைய தினம் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே நாளைய தினம் பொதுமக்களுக்கு வீதிப்போக்குவரத்து சேவையை சிறப்பாக சீர்செய்வதற்கு போக்குவரத்து பொலிஸ்படை தயார் நிலையில் உள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை துக்க நாளாக அனுஸ்டித்து முள்ளிவாய்க்கால் கடல் தொழிலாளர் சங்கம் கடற்கரை எங்கும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.
மேலும், முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதான வீதியோரத்தில் சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் பொது நினைத்தூபி வளாகத்தில் நாளைய தினம் பொதுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.