நைஜீரியா மக்களையும், அந்த நாட்டில் வசிக்கும் பிரிட்டன் பணியாளர்களையும் தீவிரவாத தாக்குதலில் இருந்து காக்க நைஜீரியாவுக்கான ராணுவ உதவி அதிகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறி உள்ளார்.
இஸ்லாமிய கிளர்ச்சியை எதிர்கொள்ள நைஜீரிய ராணுவத்திற்கு சிறப்பு ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.