‘துருக்கி ஹிட்லர்’ எனும் வாசகம் பொறிக்கப்பட்ட துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவானின் 13 அடி பொற் சிலையை தீயணைப்பு வீரர்கள் அகற்றி உள்ளனர்.
ஜெர்மனில் ‘கெட்ட செய்தி’ என்ற தலைப்பில் கலை விழா நடந்து வருகிறது. அந்த கலைவிழாவில்தான் எர்துவான் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
எர்துவான் ஆதரவாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் எழுந்த கருத்து வேறுபாட்டினை அடுத்து அந்த சிலை அகற்றப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், காத்திரமான உரையாடலுக்கு இது வழிவகுக்கும் என்று நாங்கள் நினைத்தோம் என்று கூறி உள்ளனர்.