ஒரு கொடுமைக்கார மன்னன் தனக்குப் பெண் தேடும்படி, தனது தளபதியை அனுப்பிவைத்தார். படைகளுடன் புறப்பட்டார் தளபதி. மன்னருக்குப் பயந்து, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அந்த நாட்டைக் காலி செய்துவிட்டு எப்போதோ போருந்தனர். எங்கும் பெண் கிடைக்கவில்லை என்று எப்படிச் சொல்வது, கோபித்துக்கொள்வாரே என்ற குழப்பத்துடனே, தளபதி தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அக்காளின் பெயர் ஷாரஸாத். அவள் தனது தந்தை சோகத்துடன் வருவதைக் கண்டு, காரணம் கேட்டாள். அவரும் சொன்னார்.“அப்பா, மன்னருக்குப் பெண்ணாக என்னை அளியுங்கள். ஒன்று நான் வீரமரணம் அடைவேன். இல்லையெனில், நம் நாட்டுப் இளம்பெண்களைக் காப்பாற்றுவேன்” என்றாள்.
மகளின் பேச்சைக் கேட்டு, திகில் அடைந்த தளபதி, “ஜாக்கிரதை! தன் சொந்தவேலையைப் பார்க்காத கழுதைக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?” என்று அக்கதையைக் கூறத் தொடங்கினார்.
***
ஒரு காலத்தில் ஏராளமான கால்நடைகளைக் கொண்ட பணக்கார விவசாயி ஒருவர் இருந்தார். அவர் பறவைகள், விலங்குகள், பேசும் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையவர். அவரிடம் ஓர் எருதும் ஒரு கழுதையும் இருந்தது.
ஒருநாள் பொழுது சாயும் நேரம், தொழுவம் வந்தது எருது. அந்த இடம் சுத்தமாகப் பெருக்கப்பட்டு நீர் தெளிக்கப்படு இருப்பதையும், கழுதை அங்கேயே கட்டி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டது. மாட்டுத் தொழுவம் முழுவதும் அபரிமிதமான வைக்கோல், தீவனங்கள் நிரம்பியிருந்தன. அதன் எஜமானன் அதனை ஒருபோதும் ஓட்டிச் செல்லாததால் கழுதை சுகமாகப் படுத்துக் கிடந்தது.
“உனக்குத்தான் எத்தனை அதிர்ஷ்டம்! நான் கடும் வேலையால் உழன்று சாகிறேன். ஆனால் நீ இங்கு சுகமாக இருகிறாய். உனக்கான உணவு நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உனக்கு எதுவும் குறைச்சலில்லை. நம் எஜமானன் உன்னை ஓட்டிச் செல்வது இல்லை. ஆனால் என் வாழ்க்கை அல்லும் பகலும் கடுமையான வேதனை வேலையாக களத்து மேட்டிலும், செக்கு ஆட்டுவதிலும் கழிந்து போகிறதே” என்று வருத்தத்துடன் கழுதையிடம் கூறியது எருது.
“நான் உனக்கு ஆலோசனை சொல்கிறேன். நீ வயலுக்குச் சென்றதும் உன் கழுத்தின் மீது நகத்தடியை வைத்து உடன், உனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது போல பாசாங்கு செய், உன் உடலைத் தளர்வாக்கி தரையில் அமர்ந்துவிடு. அடித்தாலும் எழாதே. ஒருவேளை நீ எழுந்தாலும் உடனே விழுந்துவிடு. உன்னை மீண்டும் கொட்டகைக்கு கொண்டு வந்து, கழனிப்பானை உன் முன் வைக்கப்பட்டால் அதைப் புசிக்காதே. இரண்டு நாட்களுக்கு மிகவும் குறைவாகச் சாப்பிடு. இந்த வழியில் நீ நடித்தால் உனக்கு நிரந்தரமாக ஓய்வு அளிக்கப்படும்” என்றது கழுதை.
விவசாயி இப்பேச்சை எல்லாம் கேட்டார். பண்ணையில் வேலை செய்யும் வேளையாள், கழனிப்பானையைக் கொண்டு வந்தபோது, எருது குறைவாகவே அதில் உண்டது. பிறகு, மறுநாள் காலை வயல்வெளிக்கு எருதைக் கூட்டிப்போக வேளையாள் வந்தபோது எருது நலம் குன்றிய நிலையிலேயே நடித்தது.
விவசாயி, வேலையாளிடம், ‘கழுதையைக் கூட்டி வா, இன்று முழுவதும் உழவு செய்வதற்கு அதனை ஏரில் பூட்டு” என்று உத்தரவிட்டால்.
அன்றைய தினம் வேலையை முடித்து, கழுதை கொட்டகைக்கு வந்தது. எருது, தனக்கு அறிவுரை வழங்கிய கழுதைக்கு நன்றி தெரிவித்தது. ஆனால், கழுதை பதில் எதுவும் சொல்லவில்லை. தன் விதியைத் தானே நொந்து கொண்டது.
மறுதினமும் வேலையாள், கழுதையை வயலுக்கு அழைத்துச் என்றான். மாலை வரை கழுதையை நன்றாக வேலை வாங்கினான். ஆகையால், கழுதை மிகவும் சோர்ந்து போய்த் திரும்பியது. அன்றைய தினமும் கழுதைக்கு, எருது நன்றி தெவித்தது.
“நான் கூறீய ஆலோசனையால் எனக்கே வினையானது. வாயை வைத்துக்கொண்டு நான் சும்மா இருந்திருக்க வேண்டும்” எனக் கழுதை நினைத்தது. பிறகு ஒரு யோசனை கழுதைக்கு வந்தது. எருதை நோக்கித் திரும்பிய கழுதை, “நம் எஜமானர் வேளையாளிடம், ‘எருது நீக்கிரம் குணம் அடையாவிட்டால், அதை கசாப்புக்கடைக்காரனிடம் கொண்டு போய்த் தொலைத்துக்கட்டிவிடு’ என்று சொல்வதைக் கேட்டேன். உன் பாதுகாப்பு குறித்த என் அச்சத்தின் காரணமாக, உடனே சொல்லிவிட நினைத்தேன்” என்றது.
கழுதையின் சொற்களைக் கேட்ட எருது. அதற்கு நன்றி தெரிவித்தது. ‘நளை நான் விருப்பமாக வேலை செய்வேன்’, என்றது. மறுநாள் அதற்கு வைத்த புண்ணாக்கை முழுவதுமாகச் சாப்பிட்ட எருது, கஞ்சிக் ல்கலயத்தை சுத்தமாக நக்கிக் காலி செய்தது.
மறுநாள் அதிகலையில், விவசாயி தன் மனைவியுடன் கொட்டகைக்கு எருதைக் காண வந்தார். தன் எஜமானரைப் பார்த்த எருது வாலை முறுக்கி துள்ளி எழுந்தது. எல்லாத் திசைகளிலும் உற்சாகமாகச் சுற்றி வந்து, தான் ஏரில் பூட்டப்பட தயார் என்று பறைசாற்றியது, வேலையாள் எருதை வேலைக்கு ஓட்டிச் சென்றார். கழுதையும் சேர்த்துத்தான்.
***
“நீங்கள் கவலைப்படாதீர்கள் அப்பா. என் மனத்தை மாற்ற முடியாது என்று ஷாரஸாத் கதை முடிந்தவுடன் கூறினாள். ஆகையால் தளபதி, தன் மகளை மணப்பெண்ணாக அலங்கரித்து, மன்னருக்கு அவளை மணம் முடிக்கத் தயார் என்று அறிவித்தார்.
ஷாரஸாத் அரண்மனைக்குச் செல்வதற்கு முன்பாகத் தன் தங்கையிடம், ‘மன்னர் என்னை வரவேற்ற பிறகு, நான் உன்னை கூப்பிடச் சொல்லி அனுப்புவேன். நீ வரும்போது, ‘அக்கா இன்றைய இரவுப் பொழுதைக் கழித்திட கொஞ்சம் அதிசயக் கதையை சொல்லேன்’ என்று கூறவேண்டும்.” என்றாள்.
தங்கையும் அதேபோல நடந்துகொண்டாள். அதற்கு, ஷாரஸாத், “நிச்சயமாகச் சொல்கிறேன். மன்னர் எனக்கு அனுமதி அளித்தால்..” என்றாள். தூக்கம் இன்மையால் அவதிப்பட்டு வந்த மன்னரும் அவள் கோரிக்கையை ஏற்றார். ஷாரஸாத் சொல்லப்போகும் கதையை கேட்க ஆவளுடன் இருந்தார்.
(இப்படி ஷாரஸாத் சொன்ன கதைகளின் தொகுப்புதான் இந்நூல்.)