வட தமிழீழம் ,முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்கான சிலை உள்ளிட்ட பொருட்களுடன் 04.09.18 அன்று மதியம் சென்றுள்ளார்கள்.
தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க குருந்தூர் மலையில் ஜயனார் ஆலயம் ஒன்று தொன்று தொட்டு வழிபட்டு வந்துள்ளது குருந்தூர் மலையில் ஏற்கனவே புத்தர் சிலையினை வைக்கும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தவேளை குருந்தூர் மலை தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாக காணப்படுகின்றது அங்கு கடந்த காலங்களில் சில மர்ம நபர்கள் புதையல் தோண்டி எடுக்கப்பட்டதற்கான தடயங்களும் காணப்பட்ட நிலையில் குறி;த்த சில காலங்களாக அங்கு இராணுவம் பாதுகாப்பிற்கு நிறுத்ப்பட்டுள்ளது. பின்னர் அங்கு சிறிலங்கா இராணுவம் வெளியேறியுள்ள நிலையில்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குமுழமுனை குன்றின் மேல் குமரன் ஆலயத்திற்கு சென்ற பௌத்த துறவிகள் சிலர் அங்கு பார்வையிட்டுவிட்டு சென்றுள்ளார்கள் குன்றின் மேல் குமரன் ஆலயத்தினை புனரமைப்பு செய்த நிர்வாகத்தினருக்கு அது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி என்றும் ஆழப்படுத்தியோ கனரக வாகனங்கள் கொண்டோ வேலை செய்யவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில்
குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதியில் அமைந்துள்ள குருந்தூர் மலை மறைமுகமாக அங்கு புத்தர் சிலையினை வைப்பதற்காக ஏற்கனவே சில புத்த துறவிகள் அந்த வீதியால் சென்று பார்வையிட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் 04.09.18 அன்று புத்தர் சிலையுடன் புத்த துறவிகள் சிங்கள இனத்தவர்கள் சிலர் வாகனங்களில் பொருட்களை கொண்டுவந்து அங்கு புத்தர் சிலையினை வைக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்த குமுழமுனை பிரதேசஇளைஞர்கள் அங்கு சென்றபோது குறித்த வாகனமும் புத்த துறவிகளும் தண்ணிமுறிப்பு குளம் அமைந்துள்ள பகுதிக்கு ஊடாக நெடுங்கேணி செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் இரண்டு வாகனங்களை மறித்துள்ளார் இரண்டுவாகனங்கள் சென்றுவிட்டன அவர்களை தண்ணிமுறிப்பு குளக்கட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்று அங்கு சிறிலங்கா காவல்துறையினர் முன்னிலையில் கலந்துரையாடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் உள்ளிட்டவர்களுடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டன் பொலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்கள்.
ஏற்கனவே ஒட்டுசுட்டான் சிறிலங்கா காவல்துறையினரிடம் புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கு அனுமதி கோரி இருந்துள்ளதாகவும் அதற்கு அனுமதி மறுத்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
இண்டு வாகனங்கள் பௌத்த துறவிகள் இருவர் மற்றும் தொல்பொருள்திணைக்களத்தினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் 11 பேரை பொலீஸ்நிலையம் அழைத்துசென்று சிறிலங்கா காவல்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில்.
அவர்கள் அங்கு தங்கி நின்று ஆய்வு செய்வதற்காகவே வந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து பொலீசாருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது அந்த இடத்தில் தொல்பொருள் ஆய்விற்காகவே அவர்கள் சென்றுள்ளார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த நபர்களை சிறிலங்கா காவல்துறையினர் விடுவித்துள்ளார்கள்.
குறித்த பௌத்த துறவிகள் பலதடவைகள் குருந்தூர்மலையில் புத்தர் சிலையினை வைப்பதற்கு முயற்சித்துள்ளபோது அது பலனளிக்காத நிலையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களை அபகரிக்கும் நோக்கில் தொல்பொருள் திணைக்களம் பல பகுதிகளை அடையாளப்படுத்தியுள்ளார்கள் அவர்களின் உதவியுடனே இவ்வாறான பௌத்த மத பரம்பல் அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை கடந்த பெசன் தினத்தில் வெலிஓயாவில் ஒன்று கூடிய பௌத்த துறவிகள் பலர் வெலிஓயாவில் இருந்தே வடக்கிற்கான பௌத்தம் நகரவேண்டும் பேசப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.