நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபைக் கூட்டம் நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மீண்டும் அமைச்சராக நியமிப்பது குறித்து தான் எதிர்ப்பு எதனையும் வெளியிடப் போவதில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ரவி கருணாநாயக்க தெரியப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போது, தான் அவரை சந்தித்ததாகவும் அப்போது ஜனாதிபதி இதனை தன்னிடம் கூறியதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.இந்த பின்னணியில் ரவி கருணாநாயக்கவுக்கு கட்டாயமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.