நாட்டின் எதிர்காலம் குறித்து தற்போதைய இரு அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடியாதுள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கொள்கை ரீதியாக செயற்படும் ஒரு பொது அபேட்சகரை கொண்டுவரப் போவதாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் உயர் பீட உறுப்பினர் பேராசிரியர் சரத் விஜேசேகர தெரிவித்தார்.
இந்த இரு தலைவர்களும் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் கனவை உண்மைப்படுத்த தவறியுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகின்றார். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த ஐ.தே.க.யும் தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு தயாராகி வருகின்றது.
சோபித்த தேரர் முன்வைத்த இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் செயற்பாடு முழுமையாக கைவிடப்பட்டுள்ளது. இதனால், இந்நாட்டின் எதிர்காலம் குறித்து இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை வைக்க முடியாதுள்ளது.
பெயரளவில் தனிநபர்களை அடிப்படையாக கொள்ளாமல், கொள்கை ரீதியில் செயற்படும் ஒருவரை பொது வேட்பாளராக கொள்ளவுள்ளோம். இந்த பொது வேட்பாளர் யார் என்பதை பொருத்தமான நேரத்தில் நாம் நாட்டுக்கு அறிவிப்போம் எனவும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பேராசிரியர் மேலும் கூறினார்.