புதிய அரசியல் அமைப்பில் கிழக்கு தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்க கூடிய பொறிமுறை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்திடம் இருக்கின்றதா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்;டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990 -09-09ஆம் ஆண்டு 186 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 28 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இன்று ஞாயிறு;றுக்கிழமை (09) உணர்வு பூர்வமாக இடம்பெற்றது இதில் உரையாற்றிய மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பேசுகையில்
1990 அம் ஆண்டு சத்துருக்கொண்டான் கொக்குவில் பனிச்சையடி பிள்ளையார்கோவிலடி வாழ்ந்துகொண்ட அப்பாவி பொதுமக்களை சிங்களபேரினவாத சக்திகளுடன் இணைந்து துணை இராணுவக்குழுக்களும் ஊர்கால்படையும் இணைந்து 186 அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த இந்தநாள் ஆகும் இந்த படுகொலைக்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவில்லை
இலங்கையில் கிழக்கில் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, புதுக்குடியிருப்பு போன்ற படுகொலைகளுக்குள் மிக மீருகத்தனமான படுகொலை சத்துருக்கொண்டான் இங்கு வயதுவேறுபாடு இன்றி பெண்கள் பாலியல்பலாத்தகாரம் செய்யப்பட்டு மிக கொடூரமா படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறான படுகொலைகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவேண்டுமாயின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்று எமது தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்திலே அது முற்றுப்பெறும்
இந்த படுகொலையின் வடுக்கள் இந்த மக்களிடமிருந்து இன்னமும் ஆறவில்லை இருந்தபோதும் கிழக்கில் நடந்த படுகொலை தொடர்பாக நாங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து கொண்டிருப்பதோடு படுகொலைக்கான நீதியை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆமரர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் பின்னர் கிழக்கின் நிலைமை தொடர்பாக சர்வதேச மட்டத்திற்கு எடுத்துரைப்பதற்கு பெருத்தமான தலைமையில்லை என்பது எமது கிழக்கு மக்களின் ஒரு நிலைப்பாடு இந்த நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும். எனவே கிழக்கு மக்களின் இருப்பு கேள்விகுறியாக இருக்கின்ற இந்த நிலமையை நாங்கள் சர்வதேச மட்டத்திற்கு எடுத்துரைப்பதற்கு தனித்துவமான நிலையை உருவாக்கும் முயற்றிசியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் இந்த மக்களுக்கு நடந்த அநீதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கடந்த மாகாணசபையில் இருந்தவர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ கிழக்கு தொடர்பாக சர்வதேச மட்டத்துக்கோ அல்லது பொது அமைப்புக்களுக்கே கொண்டுசெல்லவில்லை.
எனவே அந்த குறைபாடு இனிமேல் இருக்க கூடாது என்பதுடன் வடகிழக்கில் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லுகின்ற அமைப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி திகழுகின்றது. எனவே அதற்கு பொருத்தமான தலைமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து உருவாகவேண்டும்.
கடந் காலத்தில் மாகாணபை இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் இந்த படுகொலைகளில் நேரடியாக சம்மந்தப்பட்டதுடன் அரசோடு சேர்ந்து இயங்கிய இவர்கள் ஒருபோதும் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என விரும்பமாட்டார்கள் மாறாக படுகொலைகளுக்காக நினைவுச் சின்னங்களை புனரமைத்து அஞ்சலி செலுத்துவதன் மூலம் தாங்கள் நல்லவர்கள் என்று மக்களிடம் வெளிபடுத்திக் கொண்டிருக்கின்றனர் எனவே இந்த நிலமைகளை மக்கள் சரியாக விளங்கிகொள்ள வேண்டும் .
வரப்போகின்ற புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு சமஷ;டி கட்டமைப்பை கொண்டிருப்பதாகவும் வெண்ணை திரண்டுவரும் முன்னே சட்டியை உடைத்த கதையாக கருத்துக்களை வெளிப்படுத்திவருவதாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே புதிய அரசியல் அமைப்பில் கிழக்கு தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்க கூடிய பொறிமுறை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்திடம் இருக்கின்றதா? சட்டியில் வெண்ணை இருந்தால் தான் அதனை உடைத்தால் பிரச்சனை இதைவிடுத்து வரப்போகும் அரசியல் அமைப்பில் ஒன்றும் இல்லை என்ற நிலையில் சட்டியை உடைத்தால் என்ன ?
இவர்கள் மக்கள் மீது அக்கறை இருப்பதானால் வரப்போகின்ற அரசியல் அமைப்பில் என்ன இருக்கின்றது என மிக தெளிவாக மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லை மாறாக பொய்களை சொல்லிவருகின்றனர்.
அரசியல் அமைப்பு குழுவில் இருக்கின்ற கலாநிதி ஜயனந்த சிங்கள மக்களுக்கு தெரிவித்துள்ளதாவது அதில் சமஷ;டி என்ற ஒன்றும் இல்லை சமஷ;டிக்குரிய குணாம்சம் எதுவும் இல்லை எனவே சிங்கள மக்கள் பயப்பிடவேண்டாம் என மிக தெளிவாக பொய் உரைக்காது தெரிவித்துள்ளார்
ஆனால் அந்த அரசியல் அமைப்பு குழுவில் இருக்கின்ற சுமத்தின் மக்களுக்கு ஏதோ இருக்கு என தெரிவிக்கின்றார். அதற்கு கிழக்கில் இருக்கின்ற தமிழரசு கட்சியின் துரைராஜசிங்கம் ஒத்துஊதி வக்காளத்து வாங்குகின்றார். ஏன் என்றர் தேர்தல் வரப்போவதால் மக்கள் மத்தியில் செல்லவேண்டும்.
எனவே பொய்களை கூறவேண்டியே நிலை எனவே மக்கள் வரப்போகும் தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதும் பெரியபுல்லுமலையில் தண்ணீர் தொழிச்சாலை நிர்மாணிப்பது தொடர்பாக இவர்கள் சட்ரீதியாகவே அல்லது குறித்த அமைச்சருடன் பேசி ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை
இதைவிடுத்து மாறாக இந்த மக்கள் தண்ணீர் இல்லாமல் ஏற்கனவே இருந்தபோது எவரும் அவர்களை சென்று எதுவும் கேட்கவில்லை ஆனால் தொழிற்சாலை அமைக்கப்படும் பொழுது எல்லோரும் வருகின்;றனர். தொழிற்சாலை அமைப்பதால் அங்கு மக்களின் விவசயம் விளங்கு வேளாண்மை .குடிநீர் பிரச்சனை இருப்புது மறுக்கமுடியாது.
ஜனநாயபோராட்டம் ஒரு தடைவ அல்லது இரண்டு தடைவ செய்யலாம் மக்களை ஏமாற்றும் விதமாக செய்யக்கூடாது. எனவே மக்களுடைய நலனில் அக்கறையுடையவர்களாக இருந்தால் நேரடிய சம்மந்தப்பட்ட அமைச்சருடன் அணுகி பேசியிருக்க வேண்டும் அல்;லது சட்டரீதியாக அணுகி இருக்கவேண்டும். ஆனால் அந்த மக்களிடம் வாக்குகளை மாத்திரம் வாங்கி கொண்டு சட்டரீதியாக அணுகாமல் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சணைக்கு தீர்வு காணப்போகின்றனர்?