பெண்களை அழகுப் பதுமைகளாக, கவர்ச்சிப் பொருளாக காட்டுவதுதான் திரைப்படங்களில் பொதுவிதியாகப் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு அழகுபடுத்தும் மேக்கப் கலைஞராக பெண்களை அங்கீகாரம் செய்ய மறுக்கிறார்கள். மேக்கப் உதவியாளர்களாக பல பெண்கள் திரைத்துறையில் உள்ளனர். ஆனால், மேக்கப் கலைஞராக வேண்டும் என்றால், அவர்கள் திரை அலங்காரம் மற்றும் மேக்கப் கலைஞர்கள் சங்கம் (மும்பை) அல்லது ஃபெப்ஸி மேக்கப் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
அதில் உறுப்பினர்களாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை. ஆண்களுக்கான வாய்ப்பு பாழாகிவிடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து, சாரு குரானா என்பவரும் 8 சக மேக்கப் கலைஞர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 04.07.14 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம், ஒரு மாதத்திற்குள்ளாக திரைத்துறையில் பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று, மனுவின் மீதான தீர்ப்பு வந்துள்ளது.
பெண்ணைக் காட்சிப்படுத்தி, லாபம் சேர்க்கும் ஒரு துறையில், பெண்ணின் தொழில்நுட்ப அறிவு அங்கீகரிக்கப்படாமல் இருப்பது எத்தகைய முரண்பாடு?
பள்ளியில் தொடங்கும் பாகுபாடு
முதலில் பள்ளியிலிருந்து தொடங்குவோம். இரு பாலர் பயிலும் பள்ளியில், ஒரு விழா நடைபெறுகிறது என்றால், குழந்தைகளுக்கான வேலைப் பிரிவினை எப்படி அமையும்? பெண் குழந்தைகளுக்கான வேலைகள் அரங்கத்தைச் சுத்தம் செய்வது, வண்ணக் கோலங்களால் அலங்கரிப்பது, வண்ண உடையணிந்து வரவேற்புக்காக வாயிலில் நிற்பது ஆகியவையே அவர்களுக்கான வேலைகளாகத் தரப்படும்.
ஆண் குழந்தைகளுக்கு அரங்கத்தை வடிவமைப்பது, பார்வையாளர்களை ஒழுங்குபடுத்துதல், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் போன்ற வேலைகள் தரப்படும். பெண்களுக்கு எந்த வேலை ஒதுக்கப்பட வேண்டும் என்பது காலம் காலமாக ஆணாதிக்கக் கட்டமைப்பில், அனைவரது பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. பெண்கள் பயிலும் பள்ளியில் இதே வயதுக் குழந்தைகள் தலைமைப் பொறுப்பேற்று நிகழ்ச்சிகளை நடத்தும் திறமையுடன் இருப்பர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
கல்லூரி வாழ்க்கை, பணியிடங்கள், திருமணத்துக்குப் பின் ஏற்படும் குடும்ப உறவுகள் என எல்லாவற்றிலும் இப் பிரச்சினை தொடர்கிறது. பொது இடங்கள் எல்லாம் ஆண்களுக்கானதாகவும், பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே பெண்களுக்கானதாகவும்தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. கலை இலக்கிய கூட்டங்கள், பொது நூலகங்கள் எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அலுவலக உறவுகளிலும்கூட, நட்பு ரீதியான உரையாடலில் நகைச்சுவையோடு, பெண்களை மட்டம் தட்டக்கூடிய போக்கு காணப்படுகிறது.
ஒரு பெண்ணை வழிநடத்தும், பாதுகாக்கும், ஊக்குவிக்கும் பாத்திரத்தை ஆண்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் சமநிலையாகப் பழகுவதாய் தெரியும் வகுப்புகள், அலுவலகங்களில்கூட இந்த நுட்பமான படிநிலையைக் காண முடிகிறது.
மறுக்கப்படும் அங்கீகாரம்
பெண்களை அழகுப் பதுமைகளாக, கவர்ச்சிப் பொருளாக காட்டுவதுதான் திரைப்படங்களில் பொதுவிதியாகப் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு அழகுபடுத்தும் மேக்கப் கலைஞராக பெண்களை அங்கீகாரம் செய்ய மறுக்கிறார்கள். மேக்கப் உதவியாளர்களாக பல பெண்கள் திரைத்துறையில் உள்ளனர். ஆனால், மேக்கப் கலைஞராக வேண்டும் என்றால், அவர்கள் திரை அலங்காரம் மற்றும் மேக்கப் கலைஞர்கள் சங்கம் (மும்பை) அல்லது ஃபெப்ஸி மேக்கப் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
அதில் உறுப்பினர்களாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை. ஆண்களுக்கான வாய்ப்பு பாழாகிவிடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து, சாரு குரானா என்பவரும் 8 சக மேக்கப் கலைஞர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 04.07.14 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம், ஒரு மாதத்திற்குள்ளாக திரைத்துறையில் பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று, மனுவின் மீதான தீர்ப்பு வந்துள்ளது. பெண்ணைக் காட்சிப்படுத்தி, லாபம் சேர்க்கும் ஒரு துறையில், பெண்ணின் தொழில்நுட்ப அறிவு அங்கீகரிக்கப்படாமல் இருப்பது எத்தகைய முரண்பாடு?
பெண்ணியம் சொல்லும் பாடம்
எல்லா நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சமநிலையிலிருக்க வேண்டும். சலுகைகள் வேண்டாம், உரிமைகளே வேண்டும். பெண்ணின் பங்கு இல்லையென்றால், குடும்பம் மட்டுமல்ல சமூக முன்னேற்றமும் தடைபடும் என்று பெண்ணியத் திறனாய்வு கூறுகிறது. ஆண்டாண்டுக் காலமாகப் பெண்களின் உடலை, உடல் உறுப்புகளை ‘அழகு’ என்ற பெயரில் போகப் பொருளாகவே கருதி வர்ணித்துவருகிறார்கள் என்று பெண்ணியம் கூறுகிறது.
பெண், தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெண்ணியம் சொல்லுகிறது. பாலின வேறுபாடு, உடல் மொழி ஆகியவற்றைக் கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும், இதன் பின்னால் அதிகார அரசியல் செயல்படுவதையும் வெளிப் படுத்துகிறார், கேட் மில்லட் என்ற பெண்ணியத் திறனாய்வாளர்.
மாற்றங்கள் ஒவ்வொருவரின் மனதில் இருந்து துவங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போகும் பெண்ணை கவனமாக இரு, யாரிடமும் அனாவசியமாக பேசாதே, ஒழுங்காக உடையணி என்று ஆயிரம் அறிவுரைகளைக் கூறும் சமூகம், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆணைப் பார்த்து, ஒழுங்காக, யோக்கியமான ஆண் மகனாக நடந்துகொள் என்று அறிவுரை சொல்லும் காலம் வந்தால்தான் இந்தப் பாலின பாகுபாட்டுக்குத் தீர்வு ஏற்படும்.