தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் ஈழ விடுதலை போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்குபற்றி அது ஒரு மக்கள் போராட்டமாக வலுப்பெற வேண்டும் என்ற சிந்தனையுடையவராக இருந்தார் .அந்தவகையில் தேசிய தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் முகமாக கலைகளின் ஊடாக தேசிய உணர்வினை மக்கள் மயப்படுத்த கலைஞர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர் .அதன் ஒரு பகுதியாக சங்கநாதம் அரங்கு போராளி கலைஞர்கள் மதிப்பிற்குரிய பேபி ஆசிரியர் தலைமையில் உருவாக்கப்பட்டு பல அரங்குகளில் ஈழ விடுதலைக்கான கலை படைப்புக்களை வழங்கி வந்தனர் .இந்நிலையில் சங்கநாத அரங்கு நிஜத்தடன் நிலவனின் வலி சுமந்த நினைவுகள் என்ற நேர்காணல் தொகுப்பு நூல் தமிழ்த்தேசிய தொலைக்காட்சியான ttn தமிழ் ஒளியின் ஆதரவுடன் 29.04.2018 அன்று பிரான்சு புறநகர் பகுதியானா லாக்குர்னவ் நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
காலை 11.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வின் நிகழ்ச்சி தொகுப்பினை ttn தமிழ் ஒளியின் தொகுப்பாளர் ரூபி ஆரம்பிக்க தொடர்ந்து தொகுப்பாளர் வண்ணன் இணைந்து கொண்டார் . தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் சிந்தனையோடு நிகழ்வு ஆரம்பமானது .தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. நினைவுத்தீபத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் வாழ்ந்து மண்ணின் வலிகளை சுமந்து , இன்று புலம்பெயர்ந்து வாழும் திரு.நா .வண்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார் .
தொடர்ந்து அகவணக்கமும் அதனைத் தொடர்ந்து கந்தப்பு ஜெந்தன் இசையமைத்து பாடிய தமிழ் மொழி வாழ்த்தும் இசைக்கப்பட்டது .வெளியீட்டு குடும்பம் சார்பாக திரு ஆனந்த வர்ணன் வரவேற்புரையினை நிகழ்த்தினார் .தொடர்ந்து ttn தமிழ் ஒளியின் பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்கள் தலைமை உரையினை நிகழ்த்தினார் .போராட்ட வரலாறு பற்றியும் தற்போது இந்நூல் வெளியிட வேண்டியதின் அவசியம் பற்றியும் உரையில் குறிப்பிட்டார் .அத்தோடு நாம் எல்லோரும் ஈழம் பற்றியே பேசுகின்றோம்; எமது தேசம் விடுதலை அடைய வேண்டும் என்றே எண்ணுகின்றோம் .ஆயினும் எமக்குள் ஒற்றுமை இல்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிப்பதற்கான கரணம் என்ன என கேள்வி எழுப்பியதோடு நாம் எல்லோரும் ஒரே தலைவனின் வழிகாட்டலில் இருந்து வந்தவர்கள் எனவே ஒற்றுமையோடு எமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டு எனவும் பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்
தொடர்ந்து வாழ்த்துரை இடம்பெற்றது .“வலிசுமந்த நினைவுகள் ” என்னும் தமிழர் வரலாற்று வலிசுமந்த ஆவண நூலிற்கான வாழ்த்துரையை ரி ரி என் குடும்பத்தவரும் சமூக செயற்பாட்டாளரும் தேசியத்தின் பால் அதி தீவிர பற்ருறுதி கொண்டவருமாகிய திருமதி ஜோதி அவர்கள் வழங்கினார் .நிஜத்தடன் நிலவன் அவர்கள் காலத்தின் தேவையை உணர்ந்து இப்படைப்பினை உருவாக்கி வெளியிடுவது சிறப்பான செயல் என்பதோடு அவரது கலைப்படைப்புகள் இன்னும் மேலோங்க வேண்டும் எனவும் வாழ்த்துரை வழங்கினார் .தொடர்ந்து நூலாசிரியரை TTN தமிழ் ஒளியின் தொகுப்பாளர் திரு திருமதி கவிதா அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார் .
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதையினை சற்சுதன் அருண்நிலா அவர்கள் வழங்கினார் .அதனைத்தொடர்ந்து வெளியீட்டுரை இடம்பெற்றது .
ரி ரி என் தமிழ் ஒளியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பார்த்தீபன் அவர்கள் வெளியீட்டுரையை நிகழ்த்தினார் .வெளியீட்டுரையில் ரி ரி என் தமிழ் ஒளியானது இந்நூலை வெளியிடுவற்கான காரணம் என்ன என்பதை விளங்கியதோடு இந்நூலின் உள்ளடங்கிய விடயங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தார் . தொடர்ந்து வலிசுமந்த நினைவுகள் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது .
ttn தமிழ் ஒளியின் நிர்வாக பொறுப்பாளர் திரு சோதிராசா மற்றும் செல்வி அருண்நிலா வெளியிட்டு வைக்க முதல் பிரதியை சொர்ணமகால் நகைமாட உரிமையாளர் திரு பரமானந்தம் பெற்றுக்கொண்டார் .
இரண்டாம் பிரதியை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாக பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டார் தொடர்ந்து பிரான்ஸ் இளையோர் அமைப்பு சார்பாக செல்வி பானுக பிரதியை பெற்றுக்கொண்டார் .சிறப்பு பிரதியை ஹாப்பி வர்த்தக நிலைய உரிமையாளர் திரு திருமதி மஞ்சு ரவி பெற்றுக்கொண்டார்.
சிறப்புரையினை உணர்வாளர் திரு .த.கேசநந்தன் அவர்கள் வழங்கினார் .அவர் தனது உரையில் உலக விடுதலை போராட்டங்களோடு எமது போராட்டங்களை ஒப்பிட்டு பேசியதோடு இன்னும் நாம் வீச்சோடு செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தமிழர்கள் பொருளாதார பலம் மிக்கவர்களாக வளர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அதன் செயற்பாட்டாளர் திரு பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றும் போது வலிசுமந்த நினைவுகள் என்னும் இந்நூல் ஏனைய மொழிகளிலும் வெளிவந்து எமது வலிகளை உலக மக்களும் அறிந்து கொள்ள வழிவகைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் கேட்டுக்கொண்டார் . தொடர்ந்து இளையோர் அமைப்பை சேர்ந்த பானுக அவர்களின் பிரென்சு மொழியிலான உரையும் இடம்பெற்றது .
தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் நிஜத்தடன் நிலவன் வழங்கினார் .ஏற்புரையில் இந்நூலை முள்ளிவாய்க்காலில் படுகொலையான உறவுகளுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்ட அவர் தேசிய ஊடகமான ரி ரி என் தமிழ் ஒளி இந்நூலை வெளியிடுவதையிட்டு மகிழ்வடைவதாக குறிப்பிட்டதோடு .இந்நூலை உருவாக்குவற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார் .தொடர்ந்து இந்நூலின் உருவாக்கத்திற்கான அவசியம் பற்றியும் அதில் உள்ளடங்கிய விபரங்கள் பற்றியும் விளக்கினார்.இந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ள பலர் இயலாமையில் வாழ்ந்து வருவதாகவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பாதிக்க பட்டவர்களின் சுய விபரங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை இந்நூலில் தவிர்க்க பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்ய யாரேனும் முன்வரும் பட்சத்தில் அவர்களுடன் தொடர்பு படுத்தி விடுவதாகவும் தெரிவித்தார் .தொடர்ந்து நூலாசிரியரின் நண்பன் திரு விஜி நிலவனுக்கு பொன்னாடை போர்த்தி மதிபளித்தார் . தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
நன்றியுரையினை ஊடகவியலாளரும் பத்திரிகை எழுத்தாளரும் உயிர்ப்பூ மற்றும் புதிய உதயம் வெளியீட்டு பிரிவில் பணியாற்றிவரும் சகோதரி நிலானி அவர்கள் வழங்கினார் .விழா இனிது நிறைவுற்றது
“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு” இன்றயை கால கட்டத்தின் தேவை கருதியும் புலம் பெயர் தேசமெங்கும் வெளியிட வேண்டிய அகத்தியம் கருதியும் சுவிஸ் நாட்டின் ஓல்டன் மாகாணத்தில் 30.04.2018 திங்கள்கிழமை புதிய உதயம் இணையதளத்தின் ஊடகப்பரிவு சுவிஸ் நாட்டில் அறிமுகம் செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .