முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு தன்னால் வழங்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்களிடம் திருப்பி கேட்ட ஒட்டுக்குழு ஈபிடிபியின் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசவிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்வரிசையில் ஆசனம் வழங்கியுள்ளமை
பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்
முன்னின்று நடாத்தியிருந்தனர். இந்த நினைவு தினத்துக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு தொகை பணத்தை வழங்கியிருந்தனர். எனினும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று தனக்கு உரிய மதிப்பு வளங்கவில்லை,
என கூறி ஈ.பி.டி.பி உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான தவராசா மாணவர்களிடம் தனது பணத்தை திரும்ப கேட்டிருந்தார். ஒரு படுகொலை சார்ந்த நினைவு தினத்துக்கு வ்லாங்கப்பட்ட பணத்தை திரும்ப கேட்டது அனைத்து மக்களிடையே தவராசா மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.
இதனை அடுத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒருவரிடம் ஒரு ரூபா என்ற
அடிப்படையில் தவராசாவினால் கேட்கப்பட்ட பணத்தை ஒன்று திரட்டி பாவப்பட்ட பணம் என பெயர் சூட்டி அதனை தவராசாவின் முன்வாயில் கதவில் கட்டி விட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ் அமுதம் விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது, தவராசா விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டு முன்வரிசையில் அவருக்கு ஆசனமும் வழங்கப்பட்டிருந்தது. இது ஏனைய பல்கலைக்கழக மாணவர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.