2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் இன்னமும் போர்த்தடயங்களை காணகூடியதாகவுள்ளது.
தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் இறுதிக் காலப்பகுதியில் இராணுவத்தின் பிடியில் இருந்து தமது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பல இடப்பெயர்வுகளை சந்தித்த தமிழ்மக்கள் இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்தடைந்தனர்.
இந்த நிலையிலேயே இறுதி யுத்தம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் அழிக்கப்பட்ட தமிழினத்தின் அழிவுத்தடயங்கள் இன்னமும் முள்ளிவாய்க்காலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.