இலங்கை தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகள் என கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அத்தோடு திமுக – காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! என மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளர்.
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் ஒ.பண்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இலங்கை தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகள் என கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளியாக அறிவித்து, திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளர்.
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் ஒ.பண்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இலங்கை போரின்போது இந்திய ராணுவம் செய்த உதவிகளை ராஜபக்சே பகிரங்கப்படுத்தியுள்ளதால், அதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் – திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகளாக கருதி தண்டனை வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை வலியுறுத்தி ஏற்கனவே முன்னாள் முதல்வர் 01.07.2010 அன்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இலங்கைக்கு உதவி ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் சர்வதேச போர்குற்றவாளிகளாக கருதி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.