ஆணுக்கு ஒரு மனைவியிருந்தால்
அவளில் மூன்று பெண்களைத் ஆராதிப்பான்
முதலில் அவனது மனைவியின்
அழகு வதனம்
அவளில் அவன் அன்னையின் குணம்
குணத்தில் அவனது பிள்ளையின் வரம்
மனைவியும் தாயும் மகழுமாகி நீயிருக்கையில் இருக்காது ஒரு போதும் உன்னிடத்தில் அவன்மீது
கோபதாபம் சாபமாயம்
அவன்மனைவி அவனைவிட ஒரு கணமேனும் முந்திப் பிறந்திருந்தால் வாடி என்பான் அவள் உள்ளத்தால் வாடாமல்
இளமை உணர்வைச் சூட
அவள் மகா இளமையாள் என்றால் என்னம்மா வென்பான் அவள் தன்னில் சரிபாக மென்றெண்ண
வயதில் சமானமென்றால் அவளிடமே கேட்பான் அன்பே அன்பனுனை எப்படி அழைக்கவென
காதற் படகில் தாமிருவர் பயணிக்கையில் யாரொருவர் குதித்தாலே
பிறிதொருவர் பிழைக்கலாமாயின் தனது ஆவியை விடுவான் அவளது ஆன்மாவைக் காக்கவென
திடுக்கிடும் நாழிகை ஒன்றில் சமூகச் சாத்தானொருவன் அவனிடம் வந்து அவன்தலையில் கத்தி வைத்து கவிதை எழுதலை நிறுத்தென்னும் கணத்தில் அவன் ஆமென்றுரைப்பான்
தனது கவிதை மனைவியல்லவா
அவளுக் கெதற்கு வேறு கவிதையென
கலியாண நாளன்று காதல் நாதத்தை அவனுரைப்பான் நாடுகடந்த நாடகத்தில் நாகரீகப் பாகத்தில் உன்னைப் போதமாக்கமாட்டேன்
நீ என்னில் அன்றே சரிபாதியாகினாயேவென
பின்னிரவு வேளையோ
அதன்பிறகு மறுதினமோ
மறுயென்மம் வரும் தமது பந்தத்தின் உச்சம் வரை அவர்கள் மிதப்பர்
சத்தியத்தின் வேரெடுத்து உண்மையன்பின் கனிசுவைக்க அவனவளில் சளைத்தவனில்லை
எனக் காட்ட அன்றிலிருந்து தமக்குள்ளிருக்கும் கரிய காட்டை வெட்டி காதல்த் தோட்டம் செய்வான்
ஒரு பொழுதும் அவள் விருப்பமின்றி அவள் ஆடைகளைக் கூடத்
தொட்டுச் சித்திரவதை தரமாட்டான்
தந்தாலும் தான் சத்திரசிகிச்சைக் கூடத்திலும் அவள் இதயத்தை தந்து தனை மீட்பதை உணர்வான்
அவள் மனதறியாமல்
கணவனென்ற கத்தியினால் குத்தி
அவளில் அந்த சுகம் தான் பருகுவானாயின்
அவள் விருப்பமின்றி
வெளியுலகுக்கே சொல்லாத அவள்
மன உடைவை ஒட்ட
உளியின் ஒசை சிற்பியாவான்
பின் தனது கண்ணைப் பிடுங்கி உன்னை விடுதலை செய்வான்
அவனது அந்தரங்க தண்டனையிலிருந்து
உன்னையும்
உன் சாவையும்
ஒரு பொழுதும் அவனுரைக்கான்
புனிதமான புத்தனோ
கருணையான கர்த்தனோ
சிவ னென்ற சித்தனோ தானென
அவனும் விலங்குதான் பெண்ணே
அவனும் சில தவறை வரைந்திருக்கலாம் இன்று
நீ என்னும் பரிசுத்த இராகத்தில் கலந்த காதல் கீதமானான்
இனி இல்லை என்றுமென்னில் அவளுக்கான வாதையும் தவறுகளும்
அவனது படத்தை வைத்து அவளுக்கொரு கவிதை அவனெழுதான்
எழுதிய கவிதையை நாடறிய விற்கான்
விற்கும் கவிதையில்# இறப்பு-என்ற சொல்லைச் செருகான்
அவசரத்தில் பயன்படுத்தினும்
தனக்கு முன் நீ இற என்று சொல்லான்
அவசரத்தில் அவசரப்படுத்தினாலும்
தனக்குமுன் நீ இற என்று சொல்லான்
அவசரத்துக்கு நீ அழைத்த போதும்
தனக்கு முன் நீ இற என்று சொல்லேன்
அவசரத்துக்கு உன்னை அழைத்து விட்டு
எனக்கு முன் நீ இற என்று சொல்லான்
அவசரத்தை தின்று விட்டு அவசரமாய்
தனக்கு முன் நீ இற என்று சொல்லான்
அவசர உலகில் நீ அவசரமா போவென
தான் அவசரப்படுத்தவே மாட்டான்
ஏனெனில் அவன் ஆண்
பெண்மையை தாய்மையாய் பார்க்கும்
சுத்தமான ஆண்
ஆனால் இவன் யார்?