ஆதாம் பாலம் எங்க இருக்கு தெரியுமா? ஆதாம் பாலம்னா வேற எதும் இல்ல.. சாட்ஜாட் ராமபிரான் கட்டுனதா நம்பப்படுகிற அதே ராமர் பாலம்தான். ராமர் பாலம் என்றதும் சிலருக்கு, ராமேஸ்வரம் என்று சரியாக தெரிந்துவிடும். ஆனால், ஆதாம் பாலம் என்றதும் ஓ அதுவா…. பாம்பன் பாலம்தான என்கிறார்கள்.
அட.. அது ஆக்ட்சுவலா பாலமே இல்லைங்க. இது மதவாதிகளின் சதி… நல்ல திட்டத்தை முடக்குகிறார்கள் என்று ஒரு குரூப்பு.. இத்தனை தடைகளைத் தாண்டி ராமர் பாலம் எங்க இருக்கு அத யாரு கட்டுனது அத எப்ப பாக்கலாம் எப்படி போகலாம்னு இந்த பதிவுல பாக்லாமா வாங்க… ராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயரும், அணிலும் ராமருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. இந்த புராணக்கதையில் கூறப்பட்டுள்ளது உண்மை என ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஆராய்ந்து கூறியுள்ளது. இது தமிழகத்தில் ராம நம்பிக்கை கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நீங்களும் ராமர் பாலத்தை பார்க்கவேண்டுமா?
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் 560கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பயணம் இரு வழித்தடங்களில் சாத்தியமாகிறது. 1. சென்னை – விழுப்புரம் – திருச்சி – ராமேஸ்வரம் 2. சென்னை – திருச்சி – சிவகங்கை – ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரு வழிதான் என்றாலும், திருச்சி தாண்டி சிவகங்கை – ராமநாதபுரம் சென்று வரும் வழித்தடத்தை மாற்றுப் பாதையாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
சென்னையிலிருந்து விழுப்புரம் 3 மணி நேரத்திலும், அங்கிருந்து திருச்சி இன்னொரு மூன்று மணி நேரத்திலும் சென்றடையும் தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சியில் பார்ப்பதற்கேற்ற இடங்களாக, ஸ்ரீ ரங்கம், உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை என பல இடங்கள் இருக்கின்றன. அருகிலேயே தஞ்சாவூர் எனும் மாபெரும் சரித்திர நிகழ்வுக்கு பெயர் போன தலைநகரம் அமைந்துள்ளது.
திருச்சியிலிருந்து 3 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது ராமநாதபுரம். ராமநாதபுரத்திலிருந்து 1 மணி நேரத்தில் ராமேஸ்வரம். மொத்தம் 10 மணி நேரத்தில் ராமேஸ்வரம் செல்ல சாத்தியப்படுகிறது.
இராம சேது அல்லது இராமர் பாலம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஆதாம் பாலத்தை இராவணனிடமிருந்து சீதையைக் காப்பாற்ற உதவிய வானரங்கள் அல்லது குரங்குளின் மூலம் இராமர் கட்டினார். இராமாயணத்தில் இந்த பாலம் சேது பந்தனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
சுண்ணாம்புப் பாறைகளை வரிசையாக நீட்டிவிட்டு தமிழ் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் தீவுகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட இடம் தான் ஆதாம் பாலம்
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், இப்படியொரு பாலம் இருந்ததையும், அது மனிதர்கள் நடந்து செல்ல வசதியாக இருந்ததையும் புவியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். தற்போது இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் கடல் பகுதி சேதுசமுத்திரம் அல்லது சீ ஆப் தி பிரிட்ஜ் என்று அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவமோ, இந்துவோ எப்படியானாலும் இந்த பாலம் இருந்தது உண்மை என்று ஆவணப்படுத்தியுள்ளது ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம்.
சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கடல் வழி திட்டம் கொண்டுவந்தது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவேயான ராமர் பாலம் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை இடித்துவிட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டது.
சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு ஆனால், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த எதிர்ப்பாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலியளாளர்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த கடல் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை இத்திட்டம் கெடுத்துவிடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராமாயணம் தொடர்பான வாத விவாதங்களே இந்த திட்டத்தில் அதிகம் எதிரொலித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான்: இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான்.