ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியதை அடுத்து, அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவரது பதவிக்கு ஜனாதிபதி மற்றொருவரை நியமிக்க உள்ளதாகவும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.