புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன், மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்துள்ளது.
டசுகூ ஹோஞ்சோ ஜப்பான் கியோட்டோவில் 1942-ம் ஆண்டில் பிறந்தவர். 1984 முதல் இவர் கியோட்டோ பல்கலையில் பணியாற்றி வருகிறார்.
இதனையடுத்து நம் உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோக்கட்டி செல்களை அது தீவிரமாகத் தாக்கும் கேன்சர் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டனர்.
நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பில் புரோட்டீன் ஒன்று தடையாகச் செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்தார். இந்தத் தடையை உடைத்து விட்டால் நம் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் புற்றுநோய்க்கட்டிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதனையடுத்து புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைக்கான கருத்தாக்கத்தை அவர் வளர்த்தெடுத்தார்.
இதற்கு சமமாக ஜப்பானிய மருத்துவ விஞ்ஞானி டசூகு ஹோஞ்சோவும் இதே உடல் எதிர்ப்புச் சக்தியில் புரோட்டீனின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதுவும் தடை ஏற்படுத்துவதாக அவர் முடிவுக்கு வந்தார். ஆனால் இது வேறு ஒருமுறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை செயலாற்ற விடாமல் செய்கிறது என்பதைக் கண்டறிந்தார்.
இதனையடுத்து இருவருமே நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பில் உள்ள இந்தத் தடைக்கு தடைசிகிச்சை செய்தால் புற்றுநோயை விரட்ட முடியும் என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று கருதப்படுகிறது.