மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு இன்று காலை 9.45 மணிக்கு முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும் ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut அவர்களுக்கும் இடையில் 11/2மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது
இதில் மகாவலி தொடர்பாகவும், தொல்பொருள் திணைக்களம் ,வனவள திணைக்களம் ,வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின், அதிகாரசபைகளின் நில அபகரிப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்கள் இது தொடர்பாக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது