இது ஒரு நபர் இன்னொரு நபர் மீது காட்டும் காதல் மற்றும் பாலியல் ஈர்ப்பு ஆகும். இது ஒரு நபரின் அடையாளத்தை காட்டும்.
இது பாலியலின் வேறு நிலைகளிலிருந்து வேறுபடும். குறிப்பாக உயிரியல் பால், பால் அடையாளம், சமுதாயத்தில் பாலின் நிலை என்பவற்றிலிருந்து வேறுபடும்.
இது மூன்றாக பிரிக்கப்படும்.
- எதிர் பாலியல் – எதிர்பாலுக்கான ஈர்ப்பு
- பல் பாலியல் – ஆண், பெண் இருபாலாரின் மீதான ஈர்ப்பு
- பாலியல் – தன் பாலின் மீதான ஈர்ப்பு
ஒரு நபர் குறிப்பிட்ட பாலியல் வழிமுறையை ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன?
இதற்கு பல்வேறு விளக்கங்கள் உள்ளன. பாலியல் வழிமுறை என்பது சூழல், உயிரியல் மற்றும் மனோதத்துவம் என பல காரணிகளின் கூட்டு என்பதே அனேக விஞ்ஞானிகளின் கருத்து. இது சிறுவயதிலேயே ஏற்படுவதாகும்.
எனவே தன் பாலியல் மற்றும் பல் பாலியல் என்பன பெற்றோர்களின் வளர்ப்பினால் ஏற்படுவது அல்ல.
தன் பாலியல் மற்றும் பல் பாலியல் என்பது- மனோதத்துவ நோய் அல்ல. எனினும் சமூக பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.
ஒருவரின் பாலியல் வழிமுறையை எவ்வாறு அறிந்து கொள்வது?
இது பொதுவாக இளைய பருவத்தில் தென்படும். பாலியல் அனுபவம் ஏதுமில்லாமலும் இது ஏற்படும். உதாரணமாக, தன் பாலியல் நபர்கள், தன்னுடைய பாலைச் சேர்ந்தவர்கள் செய்யும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவர்.
சிலர் தான் தன்னின சேர்க்கையாளரால் அல்லது பல் பாலியல் உள்ளவரா என்பதை அறிந்திருப்பார்கள்.
சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்தலே, இவ்வாறான மக்கள் எதிர் கொள்ளும் முக்கியமான பிரச்சனை ஆகும்.
எனினும், ஒரே பாலைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கை தொடர்பான சந்தேகங்கள் ஏற்படுவது சாதாரணம்.
ஒருவரின் பாலியல் வழிமுறையை மாற்ற முடியுமா?
இது ஒரு நல்ல முறையல்ல என்பதே பலரின் கருத்தாகும். ஏனெனில், அதனை மாற்றுவது மிக கடினமாகும். அனேகமானோருக்கு இது இளைய பருவத்திலே ஏற்படுவதாகும். இதனால் சிலர் தனது உண்மையான பாலியலை மறைத்து வைத்திருப்பார்கள். இது சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படும் தரக்குறைவினால் ஆகும்.
எனவே, இவர்களின் பழக்கங்களை மாற்றுவதை விட அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதே உகந்தது. இல்லை எனில் அவர்கள் மன உளைச்சலுக்கு உட்படுவர்.
பாலியல் வழிமுறைக்கு உதவும் குழுக்கள் இருக்கின்றனவா?
ஆம். இவ்வாறான பல குழுக்கள் இருக்கின்றன. இவர்கள் முக்கியமாக பாலியல் தொடர்பான சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்குவதே அவர்களின் நோக்கமாகும்.
பெண் தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு ‘Equal Grounds’ எனும் குழுவும், ஆண் தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு ‘Companions on a journy’ எனும் குழுவும் உள்ளது. நீங்கள் குடும்பத்திட்ட சங்கத்தையும் நாடலாம்.
சமுதாயத்தில் இருந்து தள்ளி வைத்தலை குறைக்க என்ன செய்யலாம்?
இவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்கு எதிர்ப் பாலியல் உள்ளவர்களின் உதவியை நாடலாம். எதிர்ப் பாலியல் உள்ளவர்கள் உதவ விரும்புமிடத்து, சமுதாய நம்பிக்கைகளும், தள்ளி வைத்தலும் குறையும்.
இவ்வாறான வழிமுறைகள் கொண்டோர் இரகசியமாக வைத்திருக்காமல் வெளிப்படையாக பேசினால் பிரச்சனைகள் குறையும்.
தன்னினச் சேர்க்கை ஒரு மனநோயா?
இல்லை. இவை மனநோய்கள் அல்ல. மனித பாலியலில் இருந்து வேறுபடுபவை ஆகும். இவை தொன்றுதொட்டு நிலவி வந்த பழக்கங்கள் ஆகும்.
‘வெளிவருதல்’ என்றால் என்ன? ஏன் இது அவசியம்?
இது வேறுபட்ட பாலியல் வழிமுறைகள் கொண்டவர்களைப்பற்றி கூறும் போது பேசப்படும் ஒன்றாகும். இது தன் உண்மையான நிலைபற்றி மற்றவர்களுக்கு சொல்வதுடன் தானும் தன் உண்மையான நிலையை அறிதல் ஆகும்.
அனேகமானோர் வெளிவருதலுக்கு தயங்குவர். இதற்கான காரணம், சமூக நிலைமைகள் ஆகும்.
‘வெளி வருதல்’என்பது ஒரு வேறுபட்ட பாலியல் வழிமுறை கொண்டவர்களுக்கு முக்கிய மனோதத்துவ படிக்கல் ஆகும். இதன் மூலம் அவர் தன்னை அறிகிறார். பின்பு சமூகத்திலுள்ளவர்களும் அறிகின்றனர்.
தன்னின தொடர்புகளின் இயற்கை என்பது யாது?
ஆண், பெண் தன்னின சேர்க்கையாளர்கள் உணர்வு பூர்வமான தொடர்புகளை ஏற்படுத்துவர். ஆராய்ச்சிகள் மூலம், தன்னின சேர்க்கையாளர்களும், சாதாரண ஆண்- பெண் உறவும் ஒரே அளவான நிம்மதியையும் சந்தோக்ஷத்தையும் ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் தன்னின சேர்க்கையாளர்கள் நல்ல பெர்றோர்களாக இருப்பார்களா?
சில தன்னின சேர்க்கையாளர்கள் பெற்றோர்கள் ஆக இருக்கின்றனர்; சிலர் பெற்றோர்களாக விரும்புகின்றார்கள்.
இவர்கள் நல்ல பெற்றோர்களாக இருப்பார்கள். தன்னின சேர்க்கையாளர்களாலும், சாதாரண ஆண்-பெண் சோடியாலும் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடையே வேறுபாடு காணப்படவில்லை என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
தன்னின சேர்க்கையாளார்கள் தன் குழந்தைகளை வதைக்கு உட்படுத்துவார்களா?
இது இன்னொரு மூட நம்பிக்கையாகும்.
தன்னின பாலியல் பற்றி சமுதாயம் தெரிந்திருக்க வேண்டியது ஏன்?
இது பற்றி சமுதாயத்துக்கு அறிவை கொடுப்பதன் மூலம்; சமூகத்தில் இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கலாம்.
எல்லா தன்னின சேர்க்கையாளர்களும் HIV தொற்று உடையவர்களா?
இது இன்னொரு பொதுவான மூட நம்பிக்கையாகும். HIV தொற்றுக்குரிய அபாயம் நபருக்கு நபர் வேறுபடும். அது பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும். எனவே எந்தவொரு உடலுறவு முறையிலும் அது பரவலாம். பாலியல் வழிமுறை இதனை பாதிக்காது.