சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களில் 9 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த இயற்கை அனர்த்தங்களில் 12 ஆயிரத்து 400ற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆயிரத்து 350 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்த 9 பேரில் 6 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் நான்கு பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அடைமழையால் களுத்துறை, காலி, கொழும்பு மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு இடம்பெற்றுள்ளது. சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவை வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.