கிளிநொச்சியில் பணிபுரிகின்ற பிராந்திய தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ள்பபட்ட இத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மோகன் திணேஸ் என்ற ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார்.
நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்றிருக்கொண்டிருந்த போது திருநகர் சுடலை வீதியில் அரசியல் கட்சி ஒன்றின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குழுவினர் குறித்த ஊடகவியலாளரை சுடலை வீதிப் பகுதியில் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.