அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின்உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வட தமிழீழம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 09.10.2018 அன்று யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து தமிழீழ மாவட்டங்களான கிளிநொச்சி வவுனியா ஊடாக இலங்கை அநுராதபுர சிறைச்சாலை வரை நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்தனர் கடும் . அனைத்து தமிழ் சமூக ஆர்வலர்களையும் இப் பயணத்தில் இணைந்து கொண்டு தமது தார்மீக பங்களிப்பை செலுத்தியுள்ளார்கள்
காலநிலையின் மாற்றங்கள் மாறினாலும் மாணவர்கள் மனங்கள் மாறாது பயணித்து ஆரசியல் கைதிகள் விடுதலை அடையும் வரை ஓயாத புயல்களாக இன்றைய தினம் (13) இலங்கை சிறைசாலையில் முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்
குறித்த முற்றுகையின் காரணமாக 10 பல்கலைக்கழக மாணவர்களும் உறவினர்கள் 5 பேரும் அரசியல் கைதிகளை பார்வையிட சிங்கள சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளார்கள்.