அநுராதபுர சிறைச்சாலைக்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களின் நடைபவணி முடிந்த பின்னர் முன்னதாக மாணவர்கள் அரசியல் கைதிகளை சந்திக்க போறோம் என கேட்டார்கள். அதற்கு இணங்க பத்து பத்து மாணவர்களாக விடுவதாக சிறைச்சாலை பொறுப்பதிகாரியால் கூறப்பட்டது. அதற்கு இணங்க மாணவர்கள் அரசிகள் கைதிகளை சந்தித்து பின்னர் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அருட்தந்தை சக்திவேல் தலைமையில் சந்தித்தனர். பின்னர் மீண்டும் பத்து மாணவர்கள் சந்திக்க சென்றனர். அதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்திக்க சென்றார்.
இவ்வளவும் நடக்கும் வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நடைபவனியில் கலந்து கொண்ட பலரும் சிறைச்சாலை முன்னபாக கூடி இருந்தனர்.
அந்த நேரத்தில் சிறைச்சாலைக்கு அருகில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் இரண்டு சொகுசு கார்களில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் காருக்கு அண்மையில் நின்று விசிலடித்து கூக்குரல் எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். அதனை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.
பின்னர் சிறைச்சாலைக்கு முன்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் , வடமாகாண சபை உறுப்பினர்கள் , சிவில் சமூக பிரதிநிதிகள் , பெரும்பாலான பல்கலைகழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் களைந்து சென்ற பின்னரே சிறைச்சாலைக்கு 50 மீற்றர் தூரத்தில் நின்ற அந்த இளைஞர் குழு சிறைசாலைக்கு முன்பாக வந்து ” இங்கே அரசியல் கைதிகள் என யாரும் இல்லை , இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் எல்லோரும் ஓடுங்கடா என தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அதன் போது பொலிசார், சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்த போது , அங்கிருந்த சிலரே அவர்களை சமாளித்தார்கள்.
அதன் போதே ஊடகவியலாளர்களுக்கு தகவல் வந்தது , சில சிங்கள இளைஞர்கள் பல்கலைகழக மாணவர்களுடன் முரண்படுகின்றார்கள் என அதன் பிறகே சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று இருந்தார்கள்.
ஊடகவியலாளர்கள் செல்லும் போது , பிரச்சனைகள் ஓரளவுக்கு தணிக்கப்பட்டு இருந்தது. அதன் போதே ஊடகவியலாளர்கள் தாம் ஊடகவியலாளர்கள் என அறிமுக படுத்தி அவர்களுடன் கதைத்த போதே அவர்கள் ஓரளவு நாகரிகமாக கதைத்தார்கள்.
அவ்வேளையில் தான் அங்கிருத்தவர்கள் ” இவர்கள் வேண்டும் என்றே முரண்பாட்டை ஏற்படுத்த வந்துள்ளார்கள். அவர்களுடன் கதைச்சு கதையை வளர்க்காதீர்கள் ” என சொல்லி அனைவரையும் அந்த இடத்தில் இருந்து விலகி செல்லுமாறு கேட்டனர்.
அங்கே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிங்கள மொழி தெரியாத மாணவர்கள் இல்லை என்றோ , உங்களில் தமிழ் தெரித்தவன் எவனும் இல்லையோ என மாணவர்கள் ஏன் கேட்க வேண்டும் ?
பொலிசார் , சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் இருவர் வந்து மாணவர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கதைக்கும் போது அங்கே ஒரு சாட்டுக்கேனும் அவர்களை சமாளிக்க முன்வராத நிலையில் ,
அந்த இடத்தில் அவர்களுக்கு எமது பிரச்சனையை விளங்கப்படுத்தி இருக்க முடியுமா ? அந்த இடம் அதற்கு ஏற்ற இடமா ? அவர்கள் எமது பிரச்னையை விளங்கி கொள்ளும் நிலையில் தான் இருந்தார்களா ? சில வேளைகளில் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க போய் அது வாய்த்தர்க்கமாக மாறி , கைக்கலப்பாக மாறி இருந்தால் ??? வவுனியா வரும் வரை மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்கி இருப்பார்கள் ? போன்ற பல கேள்விகள் என் முன் எழுந்தன.
அதற்கு பதில் அந்த இடத்தில் அவர்களுடன் கதைக்காமல் விலகி சென்றது நல்லதே …