கடன் தொல்லையால் வீட்டை கொடுத்து சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் கணவரும் விட்டுவிட்டு எங்கு சென்றார் என்றே தெரியவில்லை….
நன்றாக வாழ்ந்த குடும்பம் இன்று தன் 7மாத பெண்குழந்தைக்கு பால் வாங்ககூட கையில் காசு இல்லாமல் கையேந்த வேண்டிய நிலை கடந்த 5 மாதங்களாக சரியாக உண்ண உணவில்லை…
சில நாட்கள் தர்காவில் சில நாள் கோவில்களில் அன்னதான சாப்பாடுதான் இவர்களை இவ்வளவு நாளாக காப்பாற்றி வந்திருகிறது…..
அந்த தாய் கூறுகையில்… விதவிதமாக என் பசங்களுக்கு சமைச்சு குடுத்த கைசார் இது இன்னைக்கு கையைந்தி பிச்ச கேட்கும்போது மனசு வலிக்குது வேற வழி தெரியல இந்த பசங்கள வாழவைக்கனும் சார்…..அழுகிறார் என் பசங்கள படிக்க வைங்க சார் கையெடுத்து கும்பிடுகிறார்….
(அந்த தாய் தன்னை அலங்கோலமாக வைத்திருக்க என்ன காரணம் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)
தர்கா அருகில் உள்ள சிலர் சாப்பாடு போட்டு அவர்கள் வீட்டு குழந்தைகளின் உடையை இவர்களுக்கு கொடுத்து உதவி உள்ளனர் உதவிய முஸ்லீம் சகோதர சகோதரிகளை பாதம்பணிந்து வணங்குகிறேன்…
இவர்களின் நாடோடி நிலையை அறிந்த பின் பல பள்ளி நிர்வாகத்தினர் பள்ளியில் சேர்கவும் மறுத்துள்ளனர்..
சென்ற வாரம் இரவு சாலையோரத்தில் படுத்து உறங்கிய போது அதிகாலை 5 மணியளவில் பிரேக் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று இவர்கள் மீது மோத இருந்த வேலையில் அங்கிருந்த ஒரு காவலர் சுதாரித்து அனைவரையும் எழுப்பிவிட்டு தப்பிக்க செய்திருக்கிறார் அவருக்கும் என் பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்…
போராட்டம் நிறைந்த வாழ்க்கை….
அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த வேளையில் சிறுவன் என்னைபார்த்து சார் எங்கள படிக்க வைக்கிறீங்களா சார் என்று பரிதாபமாக கேட்க…..
நாளைக்கே ஏற்பாடு செய்றேன்பா போன் நம்பர் குறித்துகொடுத்து விட்டு சாப்பிட திண்பண்டங்களும் கையில் ரூ.200 பணம்கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்….
மறுநாள் காலை 8.30 மணிக்கு போன் ஒலிக்கிறது எடுத்தால் மறுமுனையில் சார் நாங்க ஸ்கூல் வாசல்லதான் உட்காந்து இருக்கோம் அந்த பிஞ்சுகுழந்தைகளின் குரல் படிப்பதற்கு எவ்வளவு ஆர்வத்துடன் அந்த குழந்தைகள் என்ற மகிழ்வுடன் அவர்கள் இடத்திற்கு சென்றேன்…
பள்ளியை அடைந்தோம் இங்குதான் டிவிஸ்ட்….
மனதில் ஒருவித தயக்கத்துடனே சென்றேன் சேர்பார்களா மறுப்பார்களா? சேர்க்கவில்லையெனில் குழந்தைகளின் நிலை…
மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளே சென்றவுடன் என்னை அறிமுகப்படுத்தும் முன் அங்கிருந்த ஆசிரியர் என்னை பற்றிய முழு விபரங்களையும் கூறியது ஆசர்யமாக இருந்தது அவரை இதற்கு முன் எனக்கு தெரியாது முகநூல் எந்த அளவிற்கு கைகொடுத்துள்ளது….
உடனே எங்களை அமரவைத்து உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிறுவன் இரண்டாம் வகுப்பிலும் பெரியவன் 5 ம் வகுப்பிலும் அட்மிசன் அளித்து அங்கு பயிலும் மாணவர்களிடத்தில் அழைத்து சென்று இவர்களை அறிமுகப்படுத்தியது (வீடியோ இனைக்கப்பட்டுள்ளது) அந்த பசங்க முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி…..
அதுமட்டுமின்றி இரவுக்கும் நாளை காலையும் உணவு சாப்பிடுவதற்கு ரூ.100 பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார் இந்த நல்லாசிரியர்.
ஆசிரியர் பெயர் – Thomas municipal primary school
Thennur East Trichy.
உங்களது இந்த உதவியை அக்குழந்தைக்கள் ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள் ஐயா உங்களது நல்லமனதிற்கு தலைவணங்குகிறேன்….
அடுத்து அவர்கள் தங்குவதற்கு இடம் நகர்புற வீடுஅற்றோர் தங்கும் விடுதியில் அவர்கள் தங்குவதற்கு கேட்கப்பட்டுள்ளது நிர்வாகி சென்னை சென்று இருப்பதால் வந்தவுடன் வந்து பார்க்க கூறியிருக்கிறார் அது வரை அதன் அருகிலேயே தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளது…
கடைசியில்தான் கண்கலங்க வைத்த சம்பவம் நடந்தேறியது….
அனைத்தும் முடிந்து நான் அவர்களிடம் விடைபெற்று செல்ல முற்பட்டபோது சிறுவன் என்கைகளை பிடித்துக்கொண்டு சார் நான் உங்ககூடவே வரேன் சார் உங்க ஸ்கூல்லயே படிக்குறேன் அங்கேயே படுத்துக்குறேன் என்னையும் கூட்டிகிட்டு போங்க சார் என்று கதறி கதறி அழுதது அங்குள்ள அனைவரது கண்களிலிலும் கண்ணீரை வரவழைத்தது பாசத்திற்காக ஏங்கும் அச்சிறுவனை நல்லாசிரியர் தாமஸ் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கனத்த மனதுடன் திரும்பினேன்….
தற்போதைய அவர்களது தேவை
1) சீருடை 2 செட்
2) புத்தகப்பை 2
3) உள்ளாடைகள்
4) அவர்களின் தாய்க்கு வீட்டு வேலை அல்லது ஓட்டல் அலுவலகத்தில் OA போன்ற எதாவது ஒரு பணியை திருச்சியை சுற்றியுள்ளவர்கள் கொடுத்தால் இவர்கள் பிழைக்க உதவியாக இருக்கும்…
கடன்தொல்லையால் வேறு தவறான முடிவுக்கு செல்லாமல் தன் குழந்தைகளை வாழ வைக்க கையேந்திய இந்த தாய்க்கு உதவுவோமே நண்பர்களே…..
S.சதீஷ்குமார் M.Sc.,M.Phil.,M.Ed.,
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
அரசு மேல்நிலைப்பள்ளி
பூவாளூர்
திருச்சி மாவட்டம் – 621712
WhatsApp & Mobile – 9843477770