#Metoo எனும் இயக்கத்தை ஆண்கள் தொடங்கினால் என்ன ஆகும் என்று தெரியுமா? என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “ மீடூ என்பது வக்கர புத்தியுடைய பெண்களின் எண்ணம். இதேபோல ஆண்கள் ஆரம்பித்தால் நமது வீட்டு பெண்கள் நடமாட முடியுமா? ஆயிரக்கணக்கான பெண்கள் சபரிமலைக்கு போக கூடாது என போராடி வருகிறார்களே அதை பற்றி ஏன் பேச மாட்டீங்கிறீர்கள்.
இரண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சித்தது பற்றி மட்டும் பேசுகீறிர்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. ஐயப்ப சாமி எந்த காலத்திலும் பெண்கள் வந்து சந்திக்க கூடாது என கூறவில்லை. பன்னெடுங்காலமாக கடைப்பிடித்து வரும் விரத முறைகளை குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கடைப்பிடிக்க முடியாது என்பதற்காக பெண்கள் வரக்கூடாது என கூறப்படுகிறது” எனக் கூறினார்.