இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார்.
இந்திய-ரஷியாவுக்குப் போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை
பீஜிங்:
சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது.