ஸ்ரீலங்காவின் தென்பகுதியான ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அகுணுகொலபெஸ்ஸ சிறைச்சாலையில்சிறைவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கோபுரத்தின் மீது ஏறிபோராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு உள்ளுர் நேரப்படி இன்று காலை 7 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகள் உள்ள சிறைச்சாலைகளில், போதைபொருள் கடத்தல் மற்றும் அலைபேசி பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
போதைபொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிறைச்சாலைக்குள் இருந்தவாறே இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சிறைக்குள் இருந்தாலும் அவர்க்ள முன்னர் செய்துவந்த சட்டவிரோத செயற்பாடுகள் சிறைக்கு வெளியில் தொடரந்தும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக நாட்டில் குற்றச்செயல்கள் தொடர்நது நீடித்து வந்த நிலையில், சிறைக்குள் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களைக் கட்டுபடுத்துதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அதன்படி, சிறைசாலைகளின் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைளுகக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினரின்ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
அத்துடன். கொழும்பு வெலிகடை, மகஸின் சிறைச்சாலைகள் மற்றும் அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலை ஆகியவற்றில்முதற்கட்டமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த சிறைச்சாலைகள் அமைச்சுதீர்மானித்திருந்தது.
அதன்படி, கடந்த 15ஆம் திகதி முதல், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலும், தொடர்ந்து வரும் நாட்களில்,வெலிக்கடை சிறைச்சாலையிலும் பொலிஸ் விசேட பாதுகாப்பு படையினர் இணைத்துகொள்ளப்படவுள்ளதாகஅறிவிக்கப்பட்டது.
எனினும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை இரண்டு நாட்கள் பிற்போடப்பட்டதுடன்,கடந்த 17ஆம் திகதி முதல், பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் வெளியில் இருந்து வருவோரை சோதனை செய்யும் நடவடிக்கை என்பவற்றில் பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக அகுணுகொலபெஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை சோதனையிடுதல் உள்ளிட்ட நடவடிக்கையில்விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இதற்கு அங்குள் கைதிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், இன்றுகாலை முதல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிறைச்சாலையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கொழும்புவெலிக்கடை சிசைச்சாலை கூரை மீது ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரி இந்தஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பெண் கைதிகளுடன் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு முன்னெடுத்தபேச்சுவாரத்தையை அடுத்து இந்த போராட்டம் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.