2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் நினைவேந்நதல் நிகழ்வு இன்று(18) காரைதீவு கடற்கரை காளிகோயில் அருகாமையில் இடம்பெற்றது.
முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பாஸ்காரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வினை காரைதீவு தமிழரசுக் கட்சியின் பற்றாளர்களும், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து நடத்தினார்கள்.
இந்நிகழ்வின் போது உயிர் நீத்த உறவுகளுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, இறைவணக்கத்துடன் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி த.செல்வராணி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.