“அன்புக்குரியவர்களுக்கு உதவ வேண்டிய ஒருவர், அதற்குஎதிராக தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தன் அன்புக்குரியவர்களின் வாழ்நாள் முழுவதும் பெரும் துன்பத்தை ஏற்றுகிறார்”.
சமூகத்தில் தற்கொலை சொல்லும் செய்தி என்ன?
உலகில் தற்காலத்தில் தற்கொலைகளும் தற்கொலைமுயற்சிகளும் தவிர்க்க முடியாத சமூக மற்றும் உளவியல்பிரச்சினைகளாக அதிகரித்துச் செல்கின்றன. மனஅழுத்தம், மனநலப் பிரச்சினைகள், மோசமானகுடிப்பழக்கம், சமூகத்தொடர்பின்மை மற்றும் அறியாமை, குடும்பப் பிரச்சினை மற்றும் கொடிய நோய்கள், வறுமை, கடன் தொல்லை, காதல் தோல்விகள், இளவயதுதிருமணம் என்பவை இப்பிரச்சினைக்குக் காரணமாகக்கொள்ள முடியும்
இன்றைய சமூகப் பிரச்சினைகளில் முக்கிய ஒன்றாகதற்கொலை காணப்படுகின்றது. பொதுவாக மனிதன்தனக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும்பயன்படுத்தி தன் உடல்நலத்தைக் காத்து வாழஆசைப்படுகின்றான். தன்வாழ்வில் ஏற்படும் தீங்குகளைதடுத்து தன் ஆயுளை நீட்டி வாழ ஆசைப்பட்டாலும் கூட,இன்று இது சாத்தியமற்றதாக இருக்கின்ற நிலையேகாணப்படுகின்றது. நாம் நாளந்தம் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள்போன்றவற்றை பார்க்கின்ற போது வாழ்வில் ஏற்படும்தற்காலிக அல்லது தீடிரென ஏற்படும் மனவெழுச்சி, சிக்கல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அல்லது தீர்வாகமனிதன் தற்கொலை செய்யும் செய்திகளை அறியமுடிகின்றது. அதிலும் எதற்காக தற்கொலைசெய்கின்றோம் என்று தெரியாத அளவிற்குதற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் நிகழ்வதைஅறியலாம்.
தற்கொலை என்றால் என்ன?
அதற்கான காரணங்கள் பற்றிபல்வேறு அறிஞர்கள் ஆய்வுகளைமேற்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலேஅண்மைக்காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பலஆயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. தவிரவும்பல்வேறு ஆட்கடத்தல்கள், துப்பாக்கிச் சூடுகள், பொருளாதார நெருக்கடிகள், சொத்துக்கள் சீரழிப்பு, மற்றும் பாலியல் வன்கொடுமைகள் என்பனவும்இடம்பெற்றறன. இதன்விளைவாக எழுந்த எதிர்காலம்பற்றிய அச்சம் மக்களை தற்கொலைக்கும், தற்கொலைமுயற்சிக்கும் தூண்டியுள்ளதை அறியலாம். அத்தோடு, மக்களின் வாழ்வாதார சிக்கல்களும் அதிலும் வறுமைநிலை, கடந்தகாலபோர் தற்கொலைக்கு தூண்டியஅடிப்படையான காரணமாக அமைந்தது.
பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாகவும்நிம்மதியாகவும் வாழ்வதற்கு முயற்சி செய்கின்றான். மனிதன் இறப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் ஆசைப்படுகின்றான். அதற்காக பல்வேறுஉடல், உளச்சார் பாதுகாப்பு உத்திகளை மேற்கொண்டுவாழ்நாளை நீடிக்கின்றான். மாறாக சிலர் பல்வேறுநெருக்கடிகள் காரணமாக தற்கொலை முயற்சிகளில்ஈடுபட்டு வாழ்நாளை முடித்துக் கொள்வதைக் காணலாம். என்னால் முடியாது, என்னால் சாதிக்க முடியாது, இது ஓர்அவமானம், இனி எதுவுமில்லை போன்ற எதிர்மறைமனநிலைகளை முகாமை செய்ய முடியாத நிலையே வெளிப்படுத்தி நிற்கின்றனர். இது மனிதனின் ஓர்எதிர்மறை மனதினைக் காட்டுகின்றது. இன்று தற்கொலைசெய்து கொள்வது பொதுவானதும் காலவரையறையற்றதுமானதான விடயமாகக்காணப்படுகின்றது.
கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த உலக சுகாதாரநிறுவனத்தின் அறிக்கை, உலகிலேயே ஆயிரத்திற்கும்அதிகமானோர் தினந்தோறும் தற்கொலை செய்துகொள்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது. சராசரியாகஒவ்வொரு நாற்பது செக்கன்களுக்கும் ஒருவர் தற்கொலைசெய்துகொள்கின்றனர் எனப் புள்ளி விபரங்கள்விபரிக்கின்றன. அதிகமான தற்கொலைச் சம்பவங்ளானது14 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களாலேயேமேற்கொள்ளப்படுகிறது. இன்று உலகளாவிய ரீதியில்தற்கொலையானது இறப்புக்கு காரணமாகின்ற முக்கியகாரணிகளுள் ஒன்பதாவது இடத்தில் காணப்படுகிறது.
தற்கொலை செய்ய நினைக்கும் பலர் வேறு வழியேதும்இருப்பதாக தெரியவில்லை எனக் கருதுகின்றனர். அந்தக்கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாக அவர்களுக்குத்தெரிகிறது. மேலும் அவர்களது தற்கொலை உணர்வுகளின்தீவிரத்தை மிகவும் கீழாக மதிப்பிட்டு விடக்கூடாது. அவைஉண்மையானவை, சக்தி வாய்ந்தவை மற்றும்உடனடியானவை. இதனடிப்படையில் சமூகக் காரணிகள், உளவியல் காரணிகள் மற்றும் பொருளாதாரக் காரணிகள்என்பன தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனையடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது,குறிப்பாக காதல் தோல்வி, பக்குவப்படாத மனநிலை, மனவழுத்தம், பொருளாதார நெருக்கடி, தீராத கடன்தொல்லை, அதிகரித்த வட்டியில் கடன் பெறுதல், குடும்பத்தகராறுகள், இளவயது திருமணம் ஏற்படுத்தும்பாதிப்புக்கள், படிப்பிற்கேற்ப வேலையின்மையால்ஏற்படுத்தும் தாக்கம், எதிர்பார்த்த பரீட்சை பேறுகள்வராததினால் ஏற்படுத்திய தாக்கம், அளவுக்கதிமான சீதனக்கொடுமை, தவறான பாலியல் உறவு, தவறானகருத்தரித்தல், ஆடம்பர வாழ்க்கை, மதுபோதை பாவனை, விரும்பப்படாத திருமணம், வெளிநாட்டுத் திருமணங்கள், சாதி மனப்பாண்மை, அரசியல் வாதிகளின் செல்வாக்குபோன்ற பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம்.
இத்தகைய காரணிகளின் தாக்கத்தினால் தற்கொலைமற்றும் தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றிருப்பதனைஅறியமுடிந்திருக்கின்றது. தொல்லை போன்றவற்றினால்வடக்கு கிழக்கு மாவட்டத்தில் தற்கொலை புரிவதுஅண்மைக்காலமாக அதிகரித்துள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.
19ம் நூற்றாண்டில் மேற்குலகில் தற்கொலை பற்றிசமூகவியல் ரீதியான முதன் முறையாக ஆய்வைமேற்கொண்டவராக எமில் டூர்க்கைம் எனும்சமூகவியலாளர் அடையாளப்படுத்தப்படுகிறார். இவருடையஆய்வு ஒழுக்கச்சீர் கேட்டால் ஏற்பட்ட தற்கொலைபற்றியதாகவிருந்தது. மக்களின் நடத்தையை சீர் செய்யும்சமூக வழிமுறைகள் நலிவுறும் போது அத்தகையசமூகத்தில் வாழ்கின்றவர் உளரீதியாகபாதிக்கப்படுகின்றனர் என எடுத்துக்காட்டினர்.
தற்கொலையும் தற்கொலை முயற்சியும் பல நாடுகளில்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும். அதனால், தற்கொலை முயற்சி அறிவிக்கப்படாமலும் பதிவுசெய்யப்படாமலும் மறைக்கப்படுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்றயுத்தத்தின் விளைவாக பெருமளவான மக்கள் உளரீதியானநெருக்கீட்டைக் கொண்டுள்ளனர். இத்தகையநெருக்கீடுகள் தற்கொலைக்கு தூண்டியுள்ளது.
இலங்கையிலும் குடியேற்ற திட்டங்களினால்தற்கொலைகள் பெரும் சமூகப்பிரச்சினையாக உருவாகின. 1950ம் ஆண்டிலிருந்து தற்கொலை வீதங்கள் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இளைஞர் மத்தியில் மிகவும்அதிகரித்தது. அமெரிக்காவில் 15 வயதிற்கும் 24 வயதிற்குமிடையில் மரணத்திற்கு தற்கொலைகள்மூன்றாவது காரணியாகவும் அமைந்துள்ளது. 15 வயதிற்குகுறைவான பிள்ளைகள் மத்தியில் தற்கொலை வீதம்உத்தியோகரீதியாக குறைந்து காணப்பட்டாலும் வயதுகுறைந்த குழந்தைகள் தற்கொலை செய்துள்ளதாககூறப்பட்டுள்ளது. உத்தியோக புள்ளிவிபரங்களை விட,உண்மையான எண்ணிக்கை அதனை விட இரண்டு அல்லதுமூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உலக சுகாதார நிறுவனமானது, 172 நாடுகளின் புள்ளிவிபரங்களை ஆராய்ந்து வெளியிட்டபட்டியலின்படி, தற்கொலை மரணங்களில் உலகில்நான்காவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. மேலும்வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்திற்கு பின்னர்தற்கொலைகள் அதிகரித்திருப்பதை அறியமுடிகின்றது. உலக சுகாதார நிறுவனத்தினால் செப்டெம்பர் 10 ஆம்திகதியினை தற்கொலை எதிர்ப்பு தினமாக ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதையும் அறியலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம், 2016ஆம் ஆண்டுகளில் 2,323 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன எனவும், 79 தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2015ஆம் ஆண்டு, 37 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதுடன், 18 வயதுக்குட்பட்ட 420 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 120 ஆண்களும் 280 பெண்களும் அடங்குகின்றனர். 18 வயது தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட 630 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 200 ஆண்களும் 430 பெண்களும் அடங்குகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டோரில் 250 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 90 ஆண்களும் 160 பெண்களும் அடங்குகின்றனர்.
“அதேபோன்று, 2016ஆம் ஆண்டில் 42 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதுடன், 18 வயதுக்குட்பட்ட 219 பேர் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளனர். 18 வயது தொடக்கம் 50 வயதுக்குட்பட்ட 732 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில், 203 ஆண்களும் 429 பெண்களும் அடங்குகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டோரில் 72 பேர், தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் 35 ஆண்களும், 37 பெண்களும் அடங்குகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கை சனத்தொகையில் 100,000க்கு 14 அல்லது 15 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. 30 வயதுக்கும் குறைந்தவர்களே, அதாவது 15-24 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என, அண்மைக்கால ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தொடர்பில், கடந்த வருடம் 3,025 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதில், கூடுதலானோர் ஆண்களாவர். அவர்களின் எண்ணிக்கை, 2,339 ஆகும். 686 பெண்கள், கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஆகக் கூடுதலானோர், குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டனர் என்று, பொலிஸ் விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை, 603 ஆகும். அதற்கு அப்பால், பொருளாதாரப் பிரச்சினை காரணமாக 151 பேரும், தொழில் பிரச்சினை காரணமாக 21 பேரும், அன்பு முறிந்தமையால் 272 பேரும், போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமையால் 125 பேரும், பரீட்சைகளில் தோல்வியடைந்தமையின் காரணமாக 9 பேரும், மனநலம் பாதிக்கப்பட்டிருந்தமையால் 244 பேரும், உடலில் ஏற்பட்டிருந்த பல்வேறான குறைபாடுகள் காரணமாக 381 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 முதல் 24 வயது வரையான இளம் வாலிபர்களில்தற்கொலை மூலம் மரணத்தைத் தழுவிக் கொள்வோர்மூன்றாம் இடத்தில் உள்ளனர். 17 சதவீதத்தினர் தம்வாழ்நாளில் ஏதுமோர் கட்டத்தில் மருத்துவ ரீதியானமனவழுத்தத்தினால் துன்புறுகின்றனர். அவர்களுக்குச்சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து ஆறிலொரு வீதமானஇத்தனிநபர்கள் தம்மைத்தாமே கொன்றுவிடுகின்றனர்.
ஆக, ஒருவரின் தற்கொலை செய்யும் எண்ணம் அல்லதுதற்கொலை முயற்சிகளால் எவ்வித பலனுமில்லைஎன்பதை அறியலாம். ஏனெனில் மனிதனானவன்வாழ்வதற்காக பிறந்தவனே தவிர தற்கொலைசெய்வதற்கோ சாவதற்கோ அல்ல. மனித இருப்பு மதிப்பிடமுடியாத ஒன்றாக காணப்படுகின்றது. தற்கொலைசெய்தவுடன் குறித்த நபரின் வாழ்நாள் முடிவடைந்துவிடுகின்றது. எனினும் அவரோடு தொடர்புடைய உறவுகள்படும் துன்பங்கள் வேதனைகள், இழப்புக்கள் ஏராளம். இதனை தற்கொலை எண்ணமுடைய அனைவரும்உணரவேண்டும். ஒரு பிரச்சினைக்கு தற்கொலைதான்தீர்வென்றால் அதில் எவ்வித அர்த்தமுமில்லை. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைமுகம்கொண்டு அதனை முகாமை செய்து வாழ வேண்டும். அதற்கான உத்திகள் மனிதன் அறிந்திருக்க வேண்டும்.
தற்கொலை நாட்டம் உள்ளவர்களின் அறிகுறிகளைஅடையாளம் காணத்தக்க அறிவைப்பெறுவதேதற்கொலைத் தடுப்பின் முதற்கட்டமாகும். ஏனெனில்தற்கொலைகள் ஏதோவொரு முன்னறிவித்தல் இல்லாமல்நடைபெறுவதில்லை. அவ்முன்னறிவித்தலைவிளங்கிக்கொள்ளக்கூடிய அறிவு நம்மில் பலருக்குஇல்லையே தவிர தற்கொலைகள் திடீரென சடுதியாகஎடுக்கப்படும் முடிவு அல்ல. தற்கொலைகளை தடுக்கமுடியாதென கூறுவது தவறு.
தற்கொலை செய்து கொள்ளும் நபர்கள் தற்கொலைஎண்ணங்கள் தொடர்பான துப்புக்களையும், எச்சரிக்கைகளையும் கொடுப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இறுதிவரை தம்மையாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்ததாக தற்கொலையில்இருந்து மீண்டவர்களின் அனுபவம் கூறுகிறது. அநேகமாகதற்கொலை மேற்கொண்ட அனைவருமே தமதுஉணர்வுகளை நெருக்கமானவர்களிடம் வெளிக்காட்டமுயற்சி எடுத்ததை அவர்கள் இறந்த பின்னர்தான்நெருக்கமானவர்கள் உணர்ந்துகொள்கின்றனர். இது’கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது’.
தற்கொலை மற்றும் தற்கொலை செய்பவர்கள் உடனடியாகசெய்துவிடுவதில்லை. இத்தகையதன்மையுடைவர்களிடையே வார்த்தை மூலமானகூற்றுக்களைக் எச்சரிக்கைகள் கூறுவராயின் அவர்தற்கொலை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். ‘நானே என்னைக் கொன்றுபோடத் தீர்மானித்து விட்டேன்,எனக்கு அது நடந்துவிட்டது, என்கதை முடிந்துவிட்டது.செத்துப் போயிருக்கலாம் போல இருக்கு, நான் போதுமானஅளவு காலம் வாழ்ந்து விட்டேன், நான் என்வாழ்க்கையையே வெறுக்கின்றேன்,எல்லாரையும்எல்லாத்தையும் நான் வெறுக்கின்றேன்,இனிச் சாவதைவிட வேறு வழியில்லை,இனிமேலும் என்னால் இப்படிவாழமுடியாத,இனிமேல் நீங்கள் என்னைக் காணமுடியாது’|
….மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?உங்களை மீண்டும் நான் எங்கு காண்பேன்?எல்லாவற்றிற்கும் நன்றி’ வாழ்க்கை எனக்குச் சலித்துவிட்டது’ மனிதர் தாம் தம்மைப்போல நடப்பதைத்திடீரென்று நிறுத்திக் கொண்டால் அவர்கள் தம்நடத்தையில் திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்களின்வாழ்வில் ஏதோ ஒன்று பிழையாக நடந்துகொண்டிருக்கிறது என்பதற்குரிய வழமையானஅடையாளமே இது. தற்கொலை செய்ய எண்ணுபவர்கள்கவலை, வருத்தம் என்பவற்றின் பார்த்தால்நிறைந்திருப்பதுடன் பெரும்பாலும் தம்மீதே வெறுப்புக்கொண்டவர்களாகவும் இருப்பர். அவர்களின்நடத்தைகளும் வெளித்தோற்றமும் உணவு, தூக்கம்என்பவை பற்றிய எதிர்நிலை உணர்வுகளைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.
அத்தகைய தற்கொலை நாட்டம் உள்ளவர்களைஅடையாளம் காணும் போது அவரைஉளவளத்துணையாளரிடம் அழைத்துச் செல்வதன் மூலம்வாழ்வின் அர்த்தங்களையும். வளங்களையும் புரிய வைக்கமுடியும். ஓவ்வொரு மனித உயிரும், உறவுகளும் எமக்குவேண்டியவை. அவர்களை பாதுகாப்பதும் பேணுவதும்எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை ஆகும்.
தற்கொலையை தடுப்பது மிகவும் எளிமையான விடயம்ஆனால் நம்மில் பலர் அதற்கு முயலுவதில்லை. அதற்குதற்கொலைக்குரிய அறிகுறிகளைக் கொண்டு தற்கொலைசெய்யக்கூடிய அபாயமுள்ளவர்களை அடையாளம் காணபழகவேண்டும். இதனை நீங்கள் மூன்றாம் நபருக்கு செய்யவேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒவ்வொருவரும்உங்கள் குடும்பத்தில் நண்பர்களிடத்தில் தடுக்கமுன்வந்தாலே போதும்.
தற்கொலை செய்ய நினைக்கும் ஒரு தனி மனிதனுக்குபிரதான ஆறுதல் தரும் அம்சங்களாக, அவரது குடும்பமும், நண்பர்களும் உள்ளனர். அந்த மனிதனைப் பற்றி அவரதுகுடும்பமும், முக்கிய நண்பர்களும் மட்டுமே நன்குஅறிந்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிக்கலில் அந்ததனிமனிதன் இருக்கையில், அவனுக்கு ஆறுதலாகபேசக்கூடிய உடனடி உரிமைப் பெற்றவர்கள்இவர்களேயாகும். ஒரு தனிமனிதன் தற்கொலைஎண்ணத்தில் இருக்கையில், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவருக்கு ஆறுதல் அளித்து, நம்பிக்கைஅளிப்பதில் முதன்மையான ஆட்களாக இருப்பதால், அவர்கள், தங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையில்சில புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
இடப்பெயர்விற்கு உட்பட்டு மீண்டும் சொந்த இடங்களிற்குதிரும்பிவந்துள்ள மக்களிற்கு அவர்களின்வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்கான வாய்ப்பினைப்பெற்றுக் கொடுத்தல் வேண்டும். குறிப்பாக இப்பிரதேசவிவசாய மக்களுக்கு உரங்கள் பெற்றுக் கொடுத்தல், விதைப்பதற்கான சிறந்த நெல் இனங்களை பெற்றுக்கொடுத்தல், விவசாய கல்வி மற்றும் மக்கள் அதனைமேற்கொள்வதற்கான ஓரளவான பணத்தொகையினைப்பெற்றுக் கொடுத்தல் போன்ற திட்டங்களினைஅடையாளப்படுத்தி அபிவிருத்தி மட்டத்தில் கொண்டுசெல்வதன் மூலம் தற்கொலையை குறைக்கமுடியும்.
இப்பிரதேசத்தின் பெண்கள் தொழில் செய்யும் ஆற்றல்கொண்டவர்களாகக் காணப்படுவதனால் பெண்களைவீட்டுத் தோட்டங்கள் மற்றும் விலங்கு வளர்ப்புபோன்றவற்றில் ஈடுபட ஊக்குவிக்கலாம். அவ்வாறுஊக்குவிப்பதனூடாக அம்மக்கள் தமது சுயதேவை பூர்த்திமற்றும் சிறு வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியவாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம்.
அதேபோன்று மரக்கறித் தோட்டங்கள் மூலமாக மக்களைஊக்குவிப்பதன் ஊடாகவும் பெண்கள் வேலைவாய்ப்பினைப்பெறுவதுடன் வருமானத்திலும் செல்வாக்குச்செலுத்துபவர்களாகக் காணப்படுவர். இதற்காக அம்மக்களிற்கு இலவசமான விதைகள், உர வகைகள் மற்றும்பல்லாண்டு காலமாக நன்மை தரக்கூடிய பலா, மா, தென்னை போன்ற மரக்கன்றுகள் போன்றனவற்றைஇலவசமாகக் கொடுத்தல், அவற்றுக்கான அடிப்படைஅறிவினை அம்மக்களிற்கு பெற்றுக் கொடுத்தல் மற்றும்மக்களிடையே போட்டித்தன்மையினை வளர்த்து சிறப்பாகவீட்டுத் தோட்டங்கள் (home Garden) மேற்கொள்ளும்மக்களிற்கு பரிசில்கள் கொடுத்தல், அதனைதொடர்ச்சியாக கண்காணித்தல் (Monitoring) போன்றஊக்குவிப்புகள் ஊடாக அதிக நன்மையினைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் அநாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதனையும்தற்கொலையினையும் தடுக்கமுடியும்.
மக்கள் ஒரு சீரான நிலையினை அதாவது தொடர்ச்சியானவருமானம் மற்றும் தமது தாழ்மட்ட நிலையில் இருந்துஎழும்வரை ஒரு குறிப்பிட்ட காலம் வரை அம் மக்களிற்குநிவாரண உதவிகளை (Dry ration) வழங்குவதற்கானஏற்பாடுகளை மேற்கொள்ளல். அதாவது இலவசமாக அரிசி, சீனி, மா போன்ற மக்களின் நாளாந்த தேவைகளினைபூர்த்திசெய்யக்கூடிய பொருள்களினை பெற்றுக்கொடுக்கஏற்பாடுகள் மேற்கொள்ளல். அதனால் அம் மக்களின்உணவுத் தேவையின் பெருமளவான பகுதி பூர்த்திசெய்வதோடு வறுமையினால் ஏற்படும்தற்கொலையினையும் ஒழிக்க முடியும்.
சிறு கைத்தொழில்த் துறையினை ஊக்குவிப்பதனூடாகவட கிழக்கில் வாழ்கின்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினைஏற்படுதலாம். உதாரணமாக- குடிசைக் கைத்தொழில்கள். (கல் அரிதல், மரம் அரிதல் கைவினைப் பொருட்கள் மற்றும்அலங்காரப் பொருட்கள் உற்பத்தி செய்தல்). அத்துடன்இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தொழிலினைபெற்றுக்கொள்வதற்கு ஏற்ற பயிற்சி பட்டறைகளினைவழங்குதன் மூலம் இவர்களது அநாவசிய செயற்பாடுகளால்ஏற்படும் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளையும்தடுக்கலாம்.
மேலும் அதிகமான யுத்தத்தில் மக்கள் வீடுகளைஇழந்துள்ளதனால் அம்மக்கள் வாழ்வதற்கான நிரந்தர கல்வீடுகளை அமைத்துக் கொடுத்தல் அத்தியாவசியத்தேவையாகக் காணப்படுகின்றது. பெண்களைதலைமையாகக் கொண்ட குடும்பங்களிற்கு தனிப்பட்டசலுகைகள் மற்றும் அவர்களிற்கு நிலையான வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினைஅல்லது ஏற்பாடுகளைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். மேலும் அபிவிருத்தித் திட்டங்களில் இவர்கள்முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.
பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு நிலையான விலையினைப்பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும். குறிப்பாக தோட்டச் செய்கையில்ஈடுபடும் மக்களிற்கான உள்ளுர் சந்தை மற்றும் வெளியூர்சந்தையினைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். மேலும்பிரதேசத்தில விவசாய உற்பத்திகளைசந்தைப்படுத்துவதற்கான வாகன வசதியைப் பெற்றுக்கொடுத்தல் அல்லது வாகனம் வாங்குவதற்கான கடன்உதவிகளை வழங்குதல் என்பன தற்கொலை மற்றும்தற்கொலை முயற்சிகளை தடுப்பதற்கான வழிவகைகளைஏற்படுத்தும்.
அத்துடன் தற்கொலை செய்கின்ற ஒரு பகுதியினராகமுதியவர்கள் காணப்படுகின்றனர். இம் முதியவர்களைதற்போதுள்ள குடும்பத்தினர் ஒதுக்கி முதியோர்இல்லங்களில் சேர்க்கும் நிலை காணப்படுகிறது. அவ்வாறான இடங்களில் விடுவதனை தவிர்த்துகுடும்பங்களில் உள்ளோர் முதியோரின் சொற்கேட்டுஅவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி அந்தமுதியோர்களைப் போற்றி வணங்கவேண்டும். வாழ்க்கையில் வெறுப்பென்ற நிலைக்குச் செல்லாமல்சந்தோசமாக வைத்திருக்க வேண்டியது இன்றையதலைமுறையினருடைய கடப்பாடாகும். இவ்வாறு சமூகநிலையை உருவாக்கினால் வாழ்க்கையில் வெறுப்பென்றநிலை முதியோர்களுக்கு ஏற்படாது. இதனால்தற்கொலையைத் தவிர்க்கக் கூடிய நிலைகாணப்படுகின்றது.
பாலியல் தொடர்பான பிரச்சினைகளாலும் தற்கொலைபாரிய அளவில் இடம்பெற்று வருகின்றது. இதனைத்தீர்க்கும் முகமாக பாடசாலைகளில் சிறிய வயது முதலேபாலியல் தொடர்பான பால்நிலைக் கல்விஅறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஏற்படுகின்றபிரச்சினைகள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக பாடசாலைகளில் கிராமங்களில் சமூகவிழிப்புனர்வு நாடகங்கள், குறும்படங்கள் அறிமுகம்செய்வதன் மூலம் இவ்வாறான சமூக பிரச்சினைகளின்மூலம் ஏற்படும் தற்கொலைகளினை தவிர்க்கக் கூடியதாகஇருக்கும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சிறிய வயது முதல்பெரியவராகும் வரை அவர்களுடன் சகஜமாக உரையாடும்திறன் கொண்டவர்களாக காணப்பட வேண்டும். ஏனெனில்அவ்வாறான நிலையில் தான் பிள்ளைகள்பெற்றோர்களுக்கு தனது சொந்த விடயங்களையும்பிரச்சினைகளையும், மனதில் உணர்பவற்றையும்வெளிப்படையாக பெற்றோரிடம் கூறுவார்கள்.
சிறுவயதில் இருந்தே பல்வேறு நடத்தைகள்பழக்கவழக்கங்கள், எவ்வாறான வழியைப் பின்பற்றவேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் போன்ற பலஆலோசனைகளைக் கூறக்கூடிய ஆலோசகராகபெற்றோர்கள் காணப்படுவதன் மூலம் தற்கொலைஅதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும்.
தற்போது அதிகளவில் இடம்பெற்று வருகின்றதொலைபேசிப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் தவறகதொலைபேசியைப் பயன்படுத்துவதனை முற்றாகதடைசெய்ய வேண்டும். அத்துடன் இணையத்தளங்களைஎமது அவசியத் தேவைகளுக்கும், வெறுமனே ஒரு பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்துவதன் மூலம் இவற்றினால்ஏற்படும் தற்கொலையைத் தவிர்க்கக் கூடிய நிலைகாணப்படுகிறது.
அத்துடன் ஒருவர் ஒரு தவறு செய்து விட்டால் அதனைஎல்லோருக்கும் கூறி அவமானப்படுத்தாது அதனைமறைமுகமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோஅதற்குரிய வழிவகையில் எடுத்துக்கூற வேண்டும். இதனால்எல்லோருக்கும் உளவியல் கல்வி வழங்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட இலக்கை அடையாவிடில் அதற்கான மாற்றுவழிகளை பிரயோகிக்க வேண்டும். இதற்காக குடும்பஉறுப்பினர்கள், சகபாடிகள் உதவ வேண்டும். இதுதான்முடிவு என்று சிந்திக்கின்ற நிலையைஉருவாகவிடக்கூடாது. பல்வேறுபட்ட மாற்று நிலைகள்காணப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையிலேமனநிலை பாதிக்கப்பட்டால் உளவளத்துறைஆலோசகரிடம் அல்லது சீர்மியம் வழங்கக் கூடிய ஒருவரைநாடி உளவள ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். இதன் மூலம் மாற்று வழியில் சென்று சிறப்பாகவாழக்கூடிய நிலையினை ஏற்படுத்தலாம்.
தவறான கருத்தரிப்பு, கருக்கலைப்பு முறைகளைத்தவிர்ப்பதற்காக பாடசாலைகளிலே பாலியல் கல்வியினைஅறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு தவறானசெயன்முறைகளின் மூலம் எவ்வாறான பாதிப்புக்கள்ஏற்படுகின்றன என பாடசாலை மட்டத்திலேஅனைவருக்கும் விளக்கமளிக்க வேண்டும். எத்தகையவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இப்பிரச்சினையைதவிர்கலாம் என்பது தொடர்பாக சமூக நலஉத்தியோகத்தர்கள், குடும்ப நல மாதுக்கள் இவற்றைக்மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதன் மூலம்பாதிப்படைந்த ஒருவருக்கு சரியான தீர்வைப்பெற்றுக்கொடுக்க முடிவதுடன் இதனால் தற்கொலை என்றநிலையை தவிர்க்கவும் முடியும்.
மதுப்பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டும். இதன்மூலம் குடும்பங்களிடையே ஏற்படுகின்ற பிரிவுகள், கொடுமைகள், வன்முறைகள், தகராறுகள் போன்றவற்றைக்கட்டுப்படுத்தலாம். இதனைத் தடுப்பதன் மூலம் குடும்பத்தில்அந்நியோன்னியம் ஏற்பட்டு சுமூகமான வாழ்க்கை வாழமுடிவதோடு தற்கொலையினை தடுக்கவும் முடியும்.
தற்போது காணப்படுகின்ற சினிமாப் பாணியில்திரைப்படங்களில் தொடர் நாடகங்களில்தற்கொலையைத் தூண்டக்கூடிய வழிவகைகளைஅப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றனர். இதனால்சிறுவர்கள், இளையோர் தமக்கு ஒரு சிறிய பிரச்சினைஏற்பட்டாலும் அதனை பயன்படுத்தி தற்கொலை என்ற தீர்வுபெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான நாடகங்கள்திரைப்படங்களில் தற்கொலைக் காட்சிகளைத் தவிர்க்கவழி செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட இலக்கை அடைந்து கொள்ளாத நிலையில்மாற்று வழிகளைப் பிரயோகிக்க வேண்டும். குறிப்பிட்டபெறுபேறுகளை எதிர்பார்த்து அப்பெறுபேறு கிடைக்காதுபோனால் வாழ்க்கையில் எந்த வித சிக்கல்களையும்யோசிக்காது தொழில்வாய்ப்புக்களை நோக்கி செயற்படவேண்டும். பல்வேறுபட்ட சிறிய கைத்தொழிற்சாலைகளை அமைத்து பல்கலைக்கழகம் செல்லாத இளைஞர்யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதன் மூலம் தவறான நடவடிக்கைகளுக்குசெல்லும் இன்றைய சமூகத்தினர் வேலைகளில் நேரத்தைக்கழிப்பதனால் தவறான நடவடிக்கைகளினையும்தற்கொலையினையும் குறைக்க முடியும்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை ஒதுக்கி வைக்காதுசகமனிதராக மதிக்க பழக வேண்டும். இசையைஇரசித்தல், விளையாட்டுக்களில் ஈடுபடுதல், தினசரிஉடற்பயிற்சி செய்தல், பொழுதுபோக்குச் செயற்பாடுகள், கலை, சமய, கல்வி போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம்மனதில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியநிலையை உருவாக்கி தற்கொலை மனப்பாங்கை இல்லாதுஒழிக்க முடியும்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவருக்கு எதிராக மிகக்கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். இலங்கையில் இதற்குரிய சட்டம் இருந்தும் அதனை சரிவரசெயற்படுத்தாதினாலும் தற்கொலை அதிகரித்துகாணப்படுகின்றது. காணப்படுகிறது. தண்டனைகள்வழங்கும் போது மேலும் தற்கொலையைத் தூண்டக்கூடியவிதத்தில் அமையாமல் குறைக்கக் கூடிய தண்டனைகளாகஅமைவதன் மூலம் தற்கொலையைத் தடுக்க முடியும்.
மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பதனால்கிருமிநாசினிப் பாவனையைக் கட்டுப்படுத்தி இயற்கைவளமாக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம்மருந்துப்பாவனையின் மூலம் தற்கொலை செய்யும்நிலையைக் கட்டுப்படுத்த முடியும். மருந்தகங்களிலே(Pharmacy) வைத்தியரின் ஆலோசனைப்படி தேவையானமாத்திரைகளை மடடுமே வழங்க வேண்டுமென சிபார்சுசெய்யப்பட வேண்டும். தேவையற்ற அதிகளவானமாத்திரைகளை வழங்குவதனைத் தடை செய்ய வேண்டும். இதன் மூலம் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியும்.
தற்கொலை செய்து கெர்ணடவர்களில் அநேகமானோர்விவசாயிகளாகவும், விவசாயக் குடம்பங்களைச்சேர்ந்தவர்களாகவும், கூலிவேலை செய்யும்குடும்பங்களாகவும், வேலையற்றோராகவும்காணப்படுகின்றனர். எனவே இத்தகைய விவசாயிகளுக்குபயிர்கள் அழியும் பட்சத்தில் நஷ்ட ஈடுகளை வழங்குவதன்மூலமும், மானிய அடிப்படையில் விவசாயப்பொருட்களைவிவசாய அமைச்சு வழங்குவதன் மூலமும் அவர்களது கடன்சுமையை தவிர்ப்பதன் மூலமும் தற்கொலை, மற்றும்தற்கொலை முயற்சிகளை கட்டுப்படுத்த அல்லது தடுக்கமுடியும்.
மேலும் குறித்த கடன் வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள்கடன்களை பணமாக வழங்காது சுயதொழில் வாய்ப்புஅடிப்படையில் உதவித்திட்டங்களை வழங்குவதன் மூலம்அவர்களது மூலதனத்தை அதிகரிப்பதோடு வேலையில்லாதன்மையினை குறைப்பதோடு கடன் சுமை காரணமாகதற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி செய்யும்நிலையினையும் தடுக்க முடியும்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் வறுமை ஒழிப்புத்திட்டங்கள்அனைத்தும் உரிய வகையில் அடிமட்ட வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கு சென்றடைய வழி செய்யவேண்டும். இதனால் வறுமைகாரணமாக தற்கொலை செய்வேரைகட்டுப்படுத்த முடியும்.
தற்கொலையினை தடுக்கும் பொருட்டு பல்வேறுதற்கொலைத் தடுப்புக் குழுக்கள் மற்றும் அபாயநிலைஉதவி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வகையில் பள்ளி வாயில்காப்போன் பயற்சி, சமூகவாயில்காப்போன் பயிற்சி, பொது தற்கொலைக் கல்வி, சோதனையிடல் திட்டங்கள், தொலைபேசி உதவி, தற்கொலைக்குப் பிந்தைய தடுப்பு, போன்ற தற்கொலைதடுப்பு மையங்களினை ஸ்தாபிப்பதனால்தற்கொலைகளினையும்; தற்கொலை முயற்சிகளையும்தடுக்க முடியும்.
இன்றைய நவீன யுகத்தில் தற்கொலைத் தடுப்புதொடர்பாக செயல்பட்டு வரும் பல அமைப்புகள் மற்றும்சேவை நிறுவனங்கள் பற்றிய விபரங்கள்இணையதளங்களில் கிடைக்கின்றன. இவைத்தவிர, தற்கொலை எண்ணத் தடுப்பு தொடர்பான புத்தகங்கள், சஞ்சிகைகள் தொடர்பான விபரங்களும் இதில்கிடைக்கின்றன. இணையத்தின் மூலம் ஆன்லைன்(Online) ஆலோசனை வசதியும் சாத்தியமாகிறது.
தற்கொலை எண்ணத்தினால் பாதிக்கப்படும் நபர்கள், தங்களின் எண்ண ஓட்டம் பற்றி அதே நிலையிலுள்ள பிறநபர்களிடம் கலந்துரையாடவும் முடியும். இணையத்தின்மூலம், தற்கொலை தடுப்பு சேவைப் பணியில்ஈடுபட்டிருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்து செயல்படும்வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இவ்வாறான பயன்தகுவிடயங்களினை ஆய்வுப்பிரதேச இளைஞர் யுவதிகள்அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம்இளவயது தற்கொலைகளையும் தற்கொலைமுயற்சிகளையும் தடுக்கமுடியும்.
மேற்குறிப்பிட்ட தற்கொலை தடுப்பு தொடர்பானவிடயங்கள் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வினைஅடைவதோடும் தற்கொலை மற்றும் தற்கொலைமுயற்சிகளையும் இல்லாது ஒழிக்க முடியும் . தற்கொலைஎண்ணத்துடன் உள்ள ஒருவர் அல்லது தற்கொலைஎண்ணத்துடன் இருப்பதை இனம் கண்ட ஒருவர், உளவளத்துணையாளர் , உளநலப்பிரிவு-வைத்தியசாலை, பிரதேச செயலகம் -DS, கச்சேரி, சமுக சேவைகள்திணைக்களம், ONUR), உளசமுக பணியாளர்கள் (psw), பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (WDO) , மருத்துவச்சி (PHM), மதத்தலைவர்கள், கிராம சேவகர்(GS), சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ( SDO), சமுகசேவைகள் உத்தியோகத்தர். (SSO), பாடசாலை சூழலில் – உளவளத்துணை ஆசிரியர், அதிபர், வகுப்பாசிரியர், நம்பிகைக்குரிய ஆசிரியர், பாட ஆசிரியர், ஆன்மீகவாதிகள், உளநல வைத்தியர்கள், பிரதேச வைத்தியர்கள், நாட்டு வைத்தியர்கள், அண்மையில் இலகுவாக அணுகக்கூடிய உறவினர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், குறித்தநபரின் குடும்ப உறுப்பினர்கள்., நெருக்கமானஉறவினர்கள், நண்பர்கள், ONUR ~ உளசமுகபணியாளர்கள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள்(NGO) ஆகியோரிடம் அலோசனைகளை பெற முடியும்.
சமூகத்தின் வெவ்வேறு கலாசாரங்கள், பிரிவுகளுக்கேற்பதற்கொலைக்கான காரணங்கள் மாறுபடுகின்றன. காரணம்எதுவானாலும் சரி, மற்றவகை மரணங்களைவிட,தற்கொலையைத் தடுப்பது எளிது. ஒருவர் தற்கொலைக்குமுயற்சி செய்கிறார் என்றால்இ அவருக்கு உதவி தேவைஎன்பதுதான் பொருள். இப்போதெல்லாம் தற்கொலைமுயற்சியை ஓர் உளவியல் நெருக்கடியாகவேபார்க்கிறார்கள். தற்கொலையைத் தடுக்கவேண்டியபொறுப்பு, சமூகத்தில் எல்லாருக்கும் உண்டுதற்கொலைகுறித்த குழுக் கலந்துரையாடல் விழிப்புணர்வு பரப்புரை,அதற்கான காரணம், தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின்அனைத்து மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும்.குறிப்பாகக் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம்வரை பாடசாலைகள் முதல் கிராமிய அமைப்புக்கள் வரை தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்தவேண்டும். தற்கொலை முயற்சி செய்பவர்களுக்குநெறியுரைகள்இ அறிவுரைகள் வழங்குவதற்குரியமையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும்.தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடிய சமூக,(திரைப்படம், நாடகங்கள் போன்ற) கலை, பண்பாட்டுக்காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள்தற்கொலைகளைத் தடுக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்தவேண்டும்.
நிலவன்
உளவளத்துணையாளர்
மற்றும் உளசழுகப் பணியாளர்