இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரேடியோ மற்றும் சேனல்களில் இந்திய நிகழ்ச்சிகள், படங்களுக்கு தடை விதித்து இருந்ததும், அந்த தடை 2017-ம் ஆண்டு விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.