வவுனியாவில் தம்மை பொது அமைப்பினர் என்று வெளிப்படுத்திக்கொண்டு கலந்துரையாடல்கள் ஏற்பாடுகள் செய்துகொள்பவர்கள் ஒரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏனைய கட்சிகளின் கூட்டத்திலும் சென்று தெருக்கூத்துக்களை காண்பித்து தம்மை பொது அமைப்புக்கள் என்று தெரிவித்துக்கொண்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இச் செய்றபாடுகளுக்கு ஏனைய பொது அமைப்புக்கள் அரசியல் கட்சி சாரா அமைப்புக்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பொது அமைப்பினர் என்று அறிவிக்கப்பட்டு கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படும்போது அங்கு சென்றால் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு செல்வதைக்காணக்கூடியதகாக உள்ளது.
இவ்வாறு வவுனியா மாவட்டத்திலுள்ள மக்களை ஏமாளிகளாகவே அழைத்து செயற்பட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும் பொது அமைப்புக்கள் என்று தெரிவித்துக்கொண்டு தாங்கள் கட்சிகளின் பதவிகளில் அமர்ந்துகொண்டு கட்சியின் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதற்கு பொது அமைப்புக்கள் என்ற பெயரைப்பாவித்து மக்களை மேலும் ஏமாற்றி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் அங்கத்துவம் பெற்ற கட்சிகளின் பெயரைப்பயன்படுத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்ள வக்கற்றவர்கள் பொது அமைப்பினரின் பெயரைப்பயன்படுத்திக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஒருவர் அண்மையில் தான் அங்கம் வகிக்கும் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு விட்டு கடந்த 24ஆம் திகதி வடமாகாண முன்னாள் முதலமைச்சரின் கூட்டத்திலும் கலந்துகொண்டு தனது தலையைக்காட்டிக்கொண்டுவிட்டு வவுனியாவில் மலையக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்புக்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த நபர் ஒருவரினால் பொது அமைப்பு என்று அழைப்பு விடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கலந்துரையாடல்களுக்கும் போராட்டங்களுக்கும் செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர். என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.