வவுனியாவில் இன்று பிற்பகல் 3மணியளவில் காணாமல்போன உறவுகளின் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய போராட்டம் குறித்து காணாமல் போன உறவுகள் தெரிவிக்கும்போது,
வவுனியாவில் கடந்த 617ஆவது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல்போன உறவுகள் கடந்த பல நாட்களாக வெய்யிலில் இருந்து போராடி வந்தோம் இன்று கொட்டும் மழைக்கு மத்தியிலும் எமது போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் இன்று எமது காணாமல்போன உறவுகளை அவசரமாக அழைத்து முடிவு ஒன்றினை மேற்கொண்டுள்ளோம்.
இன்றய போராட்டத்தில் எமக்குத்தீர்வு கிடைக்கவேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம்.. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து எமக்கு உதவி செய்து நேரடியாக வந்து இப்பிரச்சினையைத்தீர்த்து வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று கொட்டும் மழையிலும் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். இன்று எமது போராட்டத்தை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றன. நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடிவருகின்றோம்.
இவ்வாறு இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்போன உறவுகள் தெரிவித்துள்ளனர்.