நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக குதிரைப் பேரம் கொழும்பில் நடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போடவும், தரகர்கள் சிலர் ஊடாக பேரம் பேசல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் குரேவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு, மகிந்தவை ஆதரிக்குமாறு கோரியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் குரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு, மகிந்த ராஜபக்சவை ஆதரிக்குமாறு கோரியுள்ளார்.
அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
கட்சி எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படுவோம் என்று குரேக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்துள்ளனர்.