மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரரின் இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அதில் பங்கேற்க மறுத்து விட்டார். இதனால் முன்வரிசையில் அவருக்கான ஆசனம் வெற்றிடமாக இருந்தது.
கடந்த ஆண்டு, சோபித தேரரின் நினைவு நிகழ்வுக்கு அமைப்பாளர்கள், ஜனாதிபதிக்கு அழைப்பு அனுப்ப மறந்து போயிருந்தனர். எனினும், அந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.
இந்தமுறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ராஜித சேனாரத்ன, மறைந்த சோபித தேரரின் உடலின் மீது செய்த சத்தியத்தை ஜனாதிபதி மீறி விட்டார் என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.