தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா நெடுமாறன் எழுதிய ‘ஈழம் சிவக்கிறது’ என்ற நூலை உடனடியாக அழிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு ‘ஈழம் சிவக்கிறது’ என்ற நூலை ஐயா நெடுமாறன் எழுதியிருந்தார்.ஆனால் தமிழ்ழீத்திற்கு ஆதரவாக எழுதப்பட்டதாக கூறப்பட்டு, அந்த நூலின்; பிரதிகளும் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.; அந்த நூலை வெளியிட்டதற்காக தமிழக உளவுத்துறையால் ஐயா பழ.நெடுமாறனை கைது செய்யப்பட்டிருந்தார்;.
2006-ம் ஆண்டு ஐயா பழ.நெடுமாறன் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் தமிழக அரசு தனது நூலை பறிமுதல் செய்ததை எதிர்த்தும், மீண்டும் பறிமுதல் செய்யப்பட்ட அத்தனை நூல்களையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்; வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதி முரளிதரன் உத்தரவிடுகையில், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. எனவே ஐயா பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் ஐயா பழ.நெடுமாறனின் நூல்களை உடனடியாக அழிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடுவதாக அறிவித்துள்ளார்.