தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நடத்திவரும் போராட்டம் 631 ஆவது நாளினை கடந்த நிலையில் கிளிநொச்சி,வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் அந்த நாளினை நினைவுகூர்ந்து கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.
இன்னிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நடத்திவரும் போராட்டத்தின் 631 ஆவது நாளினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நல்லூர் கந்தல் ஆலயத்தின் முன் இருந்து தொடக்கி யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் வரை சென்றடைந்து அங்கு அவர்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை கையளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசு இந்த நாட்டில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் இதுவரை காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு அறிவிக்கப்படாத நிலையில் பணத்தினை கொடுத்து மக்களை ஏமாற்ற முனைப்புடன் செயற்படுகின்றது.
இன்னிலையில் உலகத்தின் கதவுகளையும் உலக நாடுகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தங்கள் கோரிக்கையினை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.