முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 அகவை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோம் செய்த தந்தை மகன் இருவரையும் முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்..
முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 அகவை சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் இன்னிலையில் அயல் வீட்டில் இருந்த 13 அகவை சிறுவனம் 74 அகவை சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
14.11.18 அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சிறுமி பெண் உறுப்பு வேதனையில் தவித்த போது 15.11.18அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைக்கு தாயார் கொண்டு சென்றுள்ளார் அங்கு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி தங்கி நின்ற வீட்டில் உள்ள 13 அகவை சிறுவன் மற்றும் அவனது 74 அகவையுடை தந்தை ஆகியோர் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
(15) அன்று முள்ளியவளை பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் சம்பவத்தை ஒத்துக்கொண்டுள்ளதை தொடர்ந்து குறித்த சிறுவனையும் சிறுவனின் தந்தையையும் கைதுசெய்த பொலீசார் 16.11.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்