தலைமுடி உதிர்தல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. தலை முடி உதிர்தல் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு பல்வேறு உத்திகளை கையாள்வதில் பெண்கள் கில்லாடிகள்.
இந்த விடயத்திற்கு பணம் செலவழிக்காமலேயே தீர்வு காண முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கொய்யா இலையை உபயோகித்தே தலை முடி உதிர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கொய்யா இலையில் உள்ள விட்டமின்-பியானது தலை முடி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றது. கொய்யா இலையானது தலை முடியின் வேர்ப்பகுதியை வலுவாக்கி தலை முடி உதிர்வதை தடுக்கின்றது.
மேலும் கொய்யா இலையில் உள்ள விட்டமின்-ஏ, லைக்கோப்பின் மற்றும் பைபர் என்பன தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரிகின்றது.
தலை முடிக்கு கொய்யா இலையை உபயோகிப்பதன் மூலம் பெறப்படும் நன்மைகள்
01. இளவயதிலேயே சொட்டை ஏற்படுவதென்பது பலருக்கு மனக்கக்ஷ்டத்தை ஏற்படுத்தும் விடயமாகும். எனினும் கொய்யா இலையை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி உதிர்வது தடுக்கப்படும்.
02. ஒருவருக்கு தலைமுடி உதிர்வதென்பது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும். மனஅழுத்தம், பதற்றம், சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கம் மற்றும் ஹோர்மோன் சமமின்மை போன்றவை இதற்கான சில உதாரணங்களாகும். எனினும், கொய்யா இலையானது மேற்குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைவதுடன் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகின்றது.
03. நாம் உபயோகிக்கும் ஷhம்பூக்கள், சூரிய ஒளிக்கதிர்கள் அல்லது வளி மாசு காரணமாகவும் நமது மண்டை ஓடு பாதிப்படையக் கூடும். அதன் விளைவாக முடி உதிர்தலும் ஏற்படும். எனினும், கொய்யா இலையை உபயோகிப்பதன் மூலம், மண்டை ஓடு ஈரலிப்பாக மாற்றப்படுவதுடன் தலை முடி உதிர்தலும் தடுக்கப்படும்.
அதுசரி, மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு கொய்யா இலையை எவ்வாறு தயார் செய்து கொள்வது?
தேவையான பொருட்கள்
01. ஒரு லீட்டர் தண்ணீர்
02. ஒரு கைப்பிடி கொய்யா இலை
செய்முறை
கொய்யா இலைகளை முதலில் நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி அதில் கொய்யா இலைகளை இட்டு நன்கு கொதிக்க விடவும். குறித்த தண்ணீரை 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும் அல்லது பாத்திரத்தில் உள்ள தண்ணீர் அரைவாசிக்கு வற்றும் வரை கொதிக்க விடவும். பின்பு இலையை வடித்தெடுத்து அந்த நீரை வேறு பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும்.
எவ்வாறு பயன்படுத்துவது?
நாம் தயாரித்த தண்ணீரால் தலை முடியை கழுவுவதற்கு முன்னதாக தலை முடியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் விரல்களினால் குறித்த கலவையை மண்டை ஓடு, வேர்ப் பகுதி மற்றும் அடிப் பகுதியில் பூசி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். பின்பு சாதாரண தண்ணீரால் அதனை நன்கு கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.