இன்று Amazon நிறுவனத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலக சந்தையில் தங்களுக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்திவிட்ட நிறுவனம். Jeff Bozos, ஒரு மிகப்பெரிய கம்பனியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் 1994 இல் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டு தனி ஒருவராக தனது வீட்டின் Garage இனுள் உலகையே இன்று ஆண்டுகொண்டிருக்கும் Amazon நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று Bozos இன் சொத்து மதிப்பு 1,081,250 கோடி இந்திய ரூபாய்கள். உலகில் அதிகம் பணம் படைத்தவராக இருந்த Bill Gates இனைப் பின்தள்ளி, தற்போது இவரே முதல் இடத்தில் இருக்கின்றார்.
நாம் இன்று பார்க்கப்போவது தனது அசுர வெற்றிக்கு காரணம் என Bozos கூறும் 7 பழக்கங்களையே..
1. சிறிதாக ஆரம்பியுங்கள்.
Bozos இன் Amazon நிறுவனம் ஒரு சாதாரண Garage இல் ஆரம்பிக்கப்பட்டதே. நீங்கள் ஒரு முயற்சியை ஆரம்பிப்பதாக இருந்தால் அதனை குறைந்த முதலீட்டுடன் சிறிதாக ஆரம்பியுங்கள். அந்த முயற்சியிலிருந்து வருமானம் கிடைக்க ஆரம்பித்ததும் அதைப் படிப்படியாக வளர்க்கத் துவங்குங்கள் என்கின்றார் Bozos.
2. புதுமைகள் புகுத்துங்கள்.
நீங்கள் எதைச் செய்தாலும் அதில் புதிய வழிகளை முயற்சி செய்துபாருங்கள். உங்கள் முயற்சி வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம். தோல்வியைக் கண்டவுடன் மனம் தளர்ந்துவிடாது தொடர்ந்து புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்கின்றார் இவர்.
3. வேலைகளைத் தாமதிக்காதீர்கள்.
ஒரு வேலையைச் செய்யவேண்டியிருந்தால், முடிந்தவரை விரைவாக அதனைச் செய்துமுடியுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். எதையும் பிற்போடாதீர்கள். இதுவே Bozos பின்பற்றும் வழி.
4. வெறும் திட்டங்கள் வேலைக்காகாது..
வெறுமனே திட்டங்கள் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. அவற்றை நடைமுறைப் படுத்தவேண்டும். கடின உழைப்பும், தியாகமுமே வெற்றிக்கான வழி என்கிறார் இந்த கோடீஸ்வரர்.
5. எதையும் ஈடுபாட்டோடு செய்யுங்கள்
உங்கள் மனம் விரும்புவதைச் செய்யும்போதே அதில் முழு ஈடுபாடு தோன்றும். எந்த முயற்சியாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே அதில் வெற்றிகிடைக்கும். ஏதோ எடுத்துவிட்டோம் செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் நிச்சயமாக வேலைக்காகாது என்கின்றார் இவர்.
6. உங்களால் தனியாக முடியாது.
எந்தவொரு வெற்றியும் தனி ஒருவரால் பெறப்படுவதில்லை. அதில் பலரது உழைப்புக்கள் இருக்கின்றன. உங்களுக்கென்று ஒரு குழுவை உருவாக்குங்கள். அவர்கள் உங்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருக்கமுடியும். ஒரு பொதுவான இலக்கினை நோக்கி அவர்களை வழி நடத்துங்கள். ஒரு முயற்சியை நீங்கள் தனியாக ஆரம்பிக்கலாம். ஆனால் உங்கள் நிறுவனம் வளர வளர உங்களுக்குத் தேவையான குழுவையும் சிறிது சிறிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார் Bozos.
7. நீண்டகாலத் திட்டங்களை வகுத்திடுங்கள்.
இன்றைக்கு என்ன தேவை என்பதை மட்டும் சிந்திக்காது, உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையைப் பெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தியுங்கள். ஒரு முயற்சியை செய்தால் அதிலிருந்து நீண்ட காலப் பயனை எவ்வாறு பெறுவது என்பதைக் கண்டறிந்து அந்த வழியில் செல்லுங்கள் என்கின்றார் இவர்.
இளைஞர்களினால் சமூகவலைத்தளங்களில் பிரபலமடைந்துள்ள செய்தி வாசிப்பாளர்