முல்லைத்தீவு மற்றும் முகமாலை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசங்களில், ஆறு இலட்சத்து அறுபத்து ஏழாயிரத்து நானூற்று முப்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் (667,431sqm) இருந்து பன்னிரண்டாயிரத்து நானூற்று ஜம்பத்திரண்டு (12,452) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
தற்போது முகமாலைப் பிரதேசத்தில் தொடர்ந்தும் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.