ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா உடன்படிக்கைகளை கையாளும் விதம் குறித்து முன்னாள் பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப், குற்றம்சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் “அரசியல் விருப்பமின்மை மற்றும் தீர்வை” அவர் குறைகூறியுள்ளார்.
பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பான நெருக்கடியில், டொமினிக் ராப் கடந்த வியாழக்கிழமை பதவி விலகியிருந்தார்.
இதனிடையே, சன்டே ரைம்ஸ் சஞ்சிகைக்கு கருத்து தெரிவித்த அவர், இங்கிலாந்து தன்னை கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
அத்துடன், தேவையேற்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிச் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில். பிரதமர் தெரேசா மேயின் வரைவுத் திட்டத்தை திரும்பப் பெறும் ஒப்பந்தம் பற்றி பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.