வவுனியாவில் எதிர்வரும் 02-12.2018 அன்று வவுனியா காலாச்சாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ எழுநீ” விருது விழாவிற்கு வருகைதரவுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனின் வருகையின் போது கறுப்புக்கொடி காட்ட வவுனியாவில் உள்ள தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆழமாக பார்க்கும் போது தமிழரை இனவழிப்பு செய்து குறுகிய காலத்திற்குள் களத்தில் நின்று கட்டளையிட்டு தமிழர்களை கொன்று குவித்த சரத் பொன்சேகாவை ஆதரித்து மேடையேறியர்கள் இன அழிப்பின் ஆரம்பகட்டப் பணிகளை செவ்வனே செய்துமுடித்த, இனக்கலவரங்களை நடத்திய, யாழ்நூலத்தை நாசமாக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணிலை மீண்டும் பிரதமராக்க இரவுபகல் பாராமல் உழைக்கும் இவர்கள் ஏன் விக்னேஸ்வரணை எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைகான முனைந்தபோது பல திடுக்கிடும் காரணங்கள் வெளியாகியுள்ளன.
வெளியில் கூறப்படும் காரணங்களாக பரம்பரை பரம்பரையாக வவுனியாவில் வழங்கப்படும் அனைத்துவிருதுகளையும் வாங்கி அடுக்கிவைக்கும் பலருக்கு இதில் விருது வழங்காமல் புதியர்களை தெரிவு செய்துள்ளமை.
வவுனியா நகரசபையில் நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வுபெற்ற துப்பரவுத் தொழிலாளர் தம்பதிஒன்றை மங்கள விளக்கேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் சுமந்திரனுக்கும் விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாமை.
தமிழரசுக்கட்சின் வவுனியா மாவட்ட நிர்வாகி ஒருவரது நெருங்கிய உறவினர்களுக்கு விருதுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல உள்ள போதிலும் உண்மையில் விக்னேஸ்வரன் அவர்களின் வவுனியா வருகை தமிழரசுக்கட்சியின் வாக்குவங்கியை பாதிக்கும் என்பதாலேயே எதிர்ப்பு காட்ட முனைவதாகவும் கூறப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் விருதுவழங்கும் குழுவினர் விருதிற்காக தெரிவுசெய்த 90 நபர்களில் ஒருசிலரின் தெரிவுமீது ஆட்சேபணை இருப்பின் என்ன காரணத்திற்காக அவர்களுக்கு விருது வழங்கக்கூடாது என்பதற்கான ஆதாரங்களுடன் முறையிட்டு நடவடிக்கை எடுக்க முற்படலாம் அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் இதுதொடர்பில் சபையில் விவாதித்து ஒருமுடிவிற்கு வந்திருக்கலாம் அதைவிடுத்து நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வரும் முன்னாள் முதல்வரை எதிர்ப்பது அரசியல் இலாபம் தேட முனைவதும், நிகழ்வை புறக்கணிப்பதும் விருதுபெறும் 90 பல்துறை செயற்பாட்டாளர்களையும், அவர்களின் உறவுகளையும் ,நகரசபையினரையும் அவமதிக்கும் செயலாகவே அமையும்.
அதைவிடவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவராகவிருக்கும் விக்னேஸ்வரன் அவர்களின் வருகையை தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எதிர்க்கும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியாவிற்கு வருகைதரும்போது முன்னாள் முதல்வரின் ஆதரவாளர்கள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புக்கள் உள்ளதையும் மறுக்க முடியாது.
சிலவேளைகளில் முன்னால் முதல்வருக்கு கூட்ட்மைப்பினர் எதிர்ப்பு காட்டும் குறித்த நேரத்தில் முன்னாள் முதல்வரின் ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதனால் வவுனியா எதிர்வரும் 02-12-2018 இல் சமர்க்களமாக மாறலாம் .