1989 ஆம் ஆண்டு விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம்.
இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையிலும் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் மக்கள் வாழ் இடங்களில் அங்காங்கே படையினர் நிலைகொண்டுள்ள போதும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர்களை சுதந்திரமாக நினைவிற்கொள்ள மக்கள் முன்வந்துள்ளமை மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி தமிழர் விடுதலைப்போரில் உயிரிழந்த தங்கள் பிள்ளைகளை நினைத்து கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி மனதுக்குள் குமுறி அழுத்த பெற்றோர்களுக்கு இன்று வெளிப்படையாக சுடர் ஏற்றி தங்கள் பிள்ளைகளை உறவினர்களை நினைவிற்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது.
இன்னிலையில் 2018 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள இடங்களிலும் அதற்கு முன்னாலும் அடையாளப்படுத்தி மாவீரர்களை நினைவிற்கொள்ள தாயக மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.
புலம் பெயர்ந்த மண்ணிலும் மாவீரர்களை நினைவிற்கொள்ள புலம் பெயர் மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.
கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21.