முச்சந்நியில் இருக்கும்
முனியான்டி விலாசில்..
உளுத்துப்போன உழுந்தில்.
முத்தையாப்பா சுட்ட …
வடை எத்தினை….
வடைக்கு நடுவே …
வட்டமான ஓட்டையை..
போட்டது..யார்…
இது முத்தையாப்பாவின்..
எத்தனையாவது தாச்சி வடை..
உழுந்தை ஆட்டியது..ஆட்டுக்கல்லா..
அந்நிய நாட்டு ஆதம்பாவா மிக்சியா.
வெந்தது எத்தனை..
வேகாதது எத்தனை…
சுட்டது சுடாதது எத்தனை…
போட்ட வெங்காயம் ..
சின்ன வெங்காயமா…
பெரிய வெங்காயமா…
அதை…உரித்தவர் உளவாளிளோடு..
ஓடித்திரிபவரா….
வடையின் வடிவத்தில்
இடையில் ஏற்பட்ட மாற்றம்…
குடையில் வந்தவரால் வந்ததா…
இல்லை..அது..
நடக்கவே முடியாதவர் செய்ததா…
பொரித்த வடை …
விநியோகம் செய்யப்பட்டது..
ஆட்டோவிலா….சரவணாவின்ட..
ஆம்னி ஆடம்பர வாகனத்திலா…
சுட்ட வடை விக்காவிட்டால்..
பொரித்தவர் எடுத்துக் கொள்வாரா…
அதை அடுத்த நாள்…தோசை ஆக்குவாரா.
இத்தனை கேள்விகளும்
என்னுள் உண்டு..இதை எங்கே கேட்டால்..
எனக்கு பதில் உண்டு…அதைச் சொல்லு..
தகவல் அறிய தாகமாய் உள்ளேன் .
சட்டம் இருக்குதாம்..தம்பியன் சொன்னான்.
தகவல் அறிய..நானும் போறன்..
- அதுக்கிடையில..ஆட்சியும் வடையும்…
பிள்ளையாரப்பா முடியக் கூடாது…
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..
– மாணிக்கம் ஜெகன்