வரும் ஒரு நொடியில் எல்லாம்
வரம் உனை காண வேண்டும்
தரும் ஒரு தவிப்பில் எல்லாம்
தமிழ் எமை ஆள வேண்டும்
அஞ்சுதல் அறியா வீரன்
துஞ்சியே போகாத் தீரன்
அறவலி இணைந்த ஆற்றல்
மறவலி நிறைந்த செம்மல்
தொடு பகை உடைத்த சூறை
நஞ்சரை மிதித்த வேழம்
வஞ்சரை வதைத்த காலம்
வலிமையில் ஈழக் கோலம்
கற்பனை கடந்த வீரம்
காவியப்புகழின் சாரம்
ஓவியத் தமிழின் தென்றல்
ஒப்பனை இல்லா அன்றில்
முன் பனிக் காலத் தூறல்
தமிழுக்கு வாய்த்த சாரல்
மென் மனத்தமிழின் தூவல்
காணவே கண்ணின் ஆவல்
நாளை உன் அகவை நாளில்
கண்ணெதிர் வேண்டாம் எந்தன்
கனவிலே வந்திடண்ணா
தவம் அதன் பலன் கிடைக்கும்
– கவிப்புயல் சரண்